குற்றவாளிகளை.. ஏன் பொதுவாக 'தூக்கில்' போடக்கூடாது?.. பிரபல வீரர் காட்டம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நான்கு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திட்டமிட்டு பிரியங்காவை கொலை செய்த விவரம் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக நெட்டிசன்கள் #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy #DRPriyankaReddy போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Shame on all of us we keep letting these things happens again nd again butnothing change.y can’t we make strict policy against such criminals nd hang them in front of whole town to set th examples 4 others 😡😡😡😡😡😡😡 #RIPPriyankaReddy need ur attention @narendramodi sir 🙏 pic.twitter.com/9INzPttsrx
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 29, 2019
இந்தநிலையில் இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''இது போன்ற விஷயங்கள் நடக்க மீண்டும் மீண்டும் அனுமதிக்கும் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். எதுவும் மாறுவதில்லை. இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஏன் நாம் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரக்கூடாது. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக, பொதுவில் அவர்களை ஏன் தூக்கிலிடக்கூடாது. பிரியங்கா ரெட்டிக்கு உங்கள் கவனம் தேவை பிரதமர் மோடி அவர்களே,'' என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
This is an extremely painful news, shocked & disgusted on this barbric and ghastly rape & murder. Its time we all hang our heads in shame. 😤😡 Thoughts and prayers with her freinds and family.
— yuvraj singh (@YUVSTRONG12) November 29, 2019
இதேபோல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும்,'' இது மிகவும் வேதனையான செய்தி. நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்,'' என தெரிவித்து இருக்கிறார்.