"மேட்ச் முடிஞ்சதும் அவரு என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டாரு..." சர்ச்சையை ஏற்படுத்திய 'செயல்'... 'நெகிழ' வைத்த 'பொல்லார்ட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியில் இலங்கை வீரர் குணதிலகா அவுட்டான விதம் கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

"மேட்ச் முடிஞ்சதும் அவரு என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டாரு..." சர்ச்சையை ஏற்படுத்திய 'செயல்'... 'நெகிழ' வைத்த 'பொல்லார்ட்'!!

இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அந்த அணியின் தொடக்க வீரர் குணதிலகா, 55 ரன்களில் ஃபீல்டரை ஃபீல்டிங் செய்ய தடுத்ததாக கூறி அவுட்டானார். பொல்லார்ட் வீசிய பந்தை, தட்டி வைத்த குணதிலகா, ரன் ஓட முயற்சி செய்தார். ஆனால், அதற்குள் பீல்டர் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் அருகே வந்ததால், மீண்டும் க்ரீஸ் உள்ளே செல்ல முயன்றார்.

 

அப்போது, குணதிலகா பந்தின் மீது மிதித்து விட்டு மீண்டும் உள்ளே சென்றார். பந்து கைக்கு வந்திருந்தால் அவரை அவுட் செய்திருக்கலாம். ஆனால், அவர் பந்தை மிதித்தே சென்றதால், பொல்லார்ட், அவுட்டிற்காக அப்பீல் செய்தார். தொடர்ந்து, மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க, இதனால், சக இலங்கை வீரர்கள் மற்றும் அந்த அணியின் பயிற்சியாளர்கள், நடுவரின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த சர்ச்சை அவுட் கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் விவாத பொருள் ஆன நிலையில், சிலர் குணதிலகா வேண்டுமென்றே பந்தை மிதித்தார் என்றும், மேலும் சிலர் நிச்சயம் அவருக்கு தெரியாமல் நிகழ்ந்தது என ஆதராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த அவுட் குறித்து போட்டிக்கு பின்னர், குணதிலகா பேசியுள்ளார்.

gunathilaka reveals pollard apologized after the match

'போட்டி முடிவடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட், என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். முதலில் என் மீது தவறு இருந்ததாக எண்ணி தான் அவுட் அப்பீல் செய்ததாக கூறினார். பின்னர் வீடியோவில், என் மீது தவறு இல்லை என்பது பொல்லார்டிற்கு தெரிய வந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்