IPL 2022 ஃபைனல்ஸ் : "2011 'WC' Finals கூட இவ்ளோ கனெக்ஷன் இருக்கா??.." குஜராத் அணி பகிர்ந்த ட்வீட்.. இப்போ செம வைரல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று (29.05.2022) மோதி இருந்தது.

IPL 2022 ஃபைனல்ஸ் : "2011 'WC' Finals கூட இவ்ளோ கனெக்ஷன் இருக்கா??.." குஜராத் அணி பகிர்ந்த ட்வீட்.. இப்போ செம வைரல்

Also Read | ‘இந்த மாதிரி நேரத்துல அவர் இல்லையே’.. கண்ணீர் விட்டு அழுத ஜாஸ் பட்லர்.. உருகும் ரசிகர்கள்..!

இந்த போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி அசத்தி உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் எதிரணியினர் மத்தியில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்தது.

அறிமுக தொடரிலேயே அசத்தல்

அதிலும் குறிப்பாக, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தையும் பிடித்திருந்தது. அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்தும் பலம் வாய்ந்ததாக இருக்க, முதல் குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் கண்டிருந்தது குஜராத் அணி.

Gujarat titans shared a tweet connected with 2011 WC Finals

இதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த இறுதி போட்டியில் மீண்டும் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது குஜராத். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, குஜராத் அணியினரின் பந்து வீச்சில் சிக்கி, பெரிய அளவில் ரன்களை குவிக்கத் தடுமாறியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான்.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, நிதானமாக ஆடி, 19 ஆவது ஓவரின் முதல் பந்தை இலக்கை எட்டிப் பிடித்தது. அறிமுக ஐபிஎல் தொடரையே கைப்பற்றி உள்ள குஜராத் அணி வீரர்களின் செயல்பாடையும், ஹர்திக் பாண்டியாவின் தலைமையையும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Gujarat titans shared a tweet connected with 2011 WC Finals

2011 WC கூட இவ்ளோ ஒற்றுமையா?

இந்நிலையில், குஜராத் அணி பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பையைக் கைப்பற்றி அசத்தி இருந்தது. இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில், தோனி சிக்ஸ் அடித்து முடித்து வைத்த தருணம், இன்றளவிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தக்கக் கூடிய ஒன்றாகும்.

அதே போல, நேற்றைய இறுதி போட்டியில் குஜராத் வீரர் சுப்மன் கில் சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைத்தார். அவரது ஜெர்சி நம்பர் 7 ஆகும். தோனியின் ஜெர்சி நம்பரும் 7 தான். 2011 ஆம் ஆண்டு, இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது, அணியின் பயிற்சயாளராக கேரி கிரிஸ்டனும், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் இடம்பிடித்திருந்தார்.

குஜராத் அணி பகிர்ந்த ட்வீட்

இவர்கள் இருவரும், தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தனர். அதே போல, 2011 ஆம் ஆண்டு இந்திய அணி, இலங்கை அணியை தோற்கடித்த போது, அந்த அணியில் சங்கக்காரா மற்றும் மலிங்கா ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இவர்கள் இருவரும், தற்போது தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டனர்.

Gujarat titans shared a tweet connected with 2011 WC Finals

இப்படி, 2011 ஆம் 50 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டி மற்றும் 15 ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி என இரண்டிலுமுள்ள ஒற்றுமை குறித்து, குஜராத் அணி பகிர்ந்துள்ள ட்வீட், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பதிவுகளும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | “யார் சொன்னா.. இவங்களாலும் மேட்சை வின் பண்ணி கொடுக்க முடியும்”.. போட்டி முடிந்ததும் பாண்ட்யா அதிரடி பேச்சு..!

GUJARAT TITANS, 2011 WC FINALS, IPL 2022 FINALS

மற்ற செய்திகள்