கேட்ச் பிடிக்கும்போது வழுக்கி விழுந்த கேப்டன்.. நல்லவேளை காயம் ஏற்படல.. இல்லைன்னு ஃபைனல்ல அவ்ளோ தான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் சுற்றின் போது குஜராத் அணியின் கேப்டன் சறுக்கி விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கேட்ச் பிடிக்கும்போது வழுக்கி விழுந்த கேப்டன்.. நல்லவேளை காயம் ஏற்படல.. இல்லைன்னு ஃபைனல்ல அவ்ளோ தான்..!

Also Read | ஆனந்த் மஹிந்திராவுக்கு அமெரிக்காவில் கிடைத்த கவுரவம்.. நெகிழ்ச்சியில் போட்ட ட்வீட்..!

ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 26 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 47 ரன்களை குவித்தார். மறுபக்கம் ஜாஸ் பட்லர் (89 ரன்கள்) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி, 19.3 ஓவர்களில் 191 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக குஜராத் அணி தகுதி பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 68 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களும், சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் தலா 35 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியின் நடுவே கேட்ச் பிடிக்க முயன்றபோது ஹர்திக் பாண்ட்யா சறுக்கி விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆட்டத்தின் 17-வது ஓவரை குஜராத் அணியின் யாஷ் தயால் வீசனார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஜாஸ் பட்லர், பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடித்தார். அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த ஹர்திக் பாண்ட்யா வேகமாக ஓடி வந்து கேட்ச் பிடிக்க முயன்றார்.

ஆனால் மைதானத்தில் புற்கள் ஈரப்பதமாக இருந்ததால், அவர் சறுக்கி திடீரென கீழே விழுந்தார். இதனால் பந்து அவரை தாண்டி பவுண்டரிக்கு சென்றுவிட்டது.  அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித காயமும் இல்லை ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தால் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | ஏன் ஒரு மேட்ச்ல கூட அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை?.. முதல்முறையாக மௌனம் கலைத்த சச்சின்..!

 

Nenjuku Needhi Home
CRICKET, HARDIK PANDYA, GT, RR, JOS BUTTLER, GT VS RR

மற்ற செய்திகள்