RRR Others USA

‘முதல் மேட்ச், முதல் பாலே அவுட்’.. சோகமாக வெளியேறிய இளம் வீரர்.. கேப்டன் மயங்க் அகர்வால் செய்த சிறப்பான செயல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே அவுட்டான இளம் வீரரை கேப்டன் மயங்க் அகர்வால் தட்டிக்கொடுத்து போட்டோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

‘முதல் மேட்ச், முதல் பாலே அவுட்’.. சோகமாக வெளியேறிய இளம் வீரர்.. கேப்டன் மயங்க் அகர்வால் செய்த சிறப்பான செயல்..!

ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் டு பிளசிஸ் 88 ரன்களும், விராட் கோலி 41 ரன்களும், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 32 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் மற்றும் ராஜபக்சே ஆகியோர் தலா 43 ரன்களும், மயங்க் அகர்வால் 42 ரன்களும் எடுத்தனர். மேலும் 7-வது வீரராக களமிறங்கிய ஓடியன் ஸ்மித் 8 பந்துகளில் 25 ரன்கள் அடித்து பஞ்சாப் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த நிலையில் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இளம் வீரர் ராஜ் பவா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆகி வெளியேறினார். அப்போது பெவிலியன் திரும்பிய அவரின் தலையில் கேப்டன் மயங்க் அகர்வால் தட்டி ஆறுதல் அளித்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Great gesture from Mayank after Raj Bawa golden duck on IPL debut

சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ராஜ் பவா இடம் பெற்றிருந்தார். அப்போட்டியில் அதிவேக சதமடித்து அனைவரது கவனத்தையும் அவர் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL, MAYANK AGARWAL, RAJ BAWA

மற்ற செய்திகள்