"மூத்த அண்ணன் இந்தியாவுக்கு நன்றி".. இலங்கைக்கு உதவிசெய்யும் இந்தியாவை பாராட்டிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை கடுமையான பொருளாதர நெருக்கடியில் தவித்துவருகிறது. இதனை அடுத்து இந்தியா அத்தியாவசிய பொருட்களை அந்நாட்டிற்கு அனுப்பிவருகிறது. இதனை முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா பாராட்டியுள்ளார்.
இலங்கை நெருக்கடி
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. அரிசி, பிரெட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், உணவு பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தினந்தோறும் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தியா உதவி
இந்நிலையில் இந்தியா 270,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு அனுப்பி உள்ளது. இலங்கையில் நிலவிவரும் மின்வெட்டை சீர்செய்யும் நோக்கத்துடன் இந்தியா இந்த முயற்சியை எடுத்துள்ளது. மேலும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பிவருகிறது. இதனை பல்வேறு இலங்கை பிரபலங்கள் வரவேற்று பாராட்டிவருகின்றனர்.
மூத்த அண்ணன்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சனத் ஜெயசூரியா இந்தியாவின் உதவி குறித்து பேசுகையில்,"அண்டை நாடாகவும், எங்களது மூத்த சகோதரராகவும், இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி செய்து வருகிறது. இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, தற்போதைய சூழ்நிலையில் வாழ்வது எளிதானது அல்ல. இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியுடன் இதிலிருந்து மீண்டு வருவோம் என்று நம்புகிறோம்" என்றார்.
இலங்கைக்கு மருத்துவ பொருட்களையும் இந்தியா அனுப்பி வருகிறது. இதுபற்றி பேசிய கொழும்பு தேசிய கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தம்மிகா,"எங்களுக்கு வரும் மருந்துகளில் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து தான் வருகின்றன. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம். எங்களை ஆதரித்துவரும் இந்தியாவுக்கு நன்றி" என்றார்.
"கோர்ட்டுக்கு வரலனா உங்களுக்கு தூக்கமே வராதா?" கணவன் மனைவி இடையேயான வழக்குகள்.. கடுப்பான நீதிபதி..!
மற்ற செய்திகள்