“கொஞ்சம் கூட ஈகோ இல்லாம இந்த முடிவை எடுத்திருக்காரு”.. துணிச்சலாக ஜடேஜா எடுத்த முடிவுக்கு முன்னாள் வீரர் பாராட்டு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.

“கொஞ்சம் கூட ஈகோ இல்லாம இந்த முடிவை எடுத்திருக்காரு”.. துணிச்சலாக ஜடேஜா எடுத்த முடிவுக்கு முன்னாள் வீரர் பாராட்டு..!

நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமானதாக அமைந்துள்ளது. ஏனென்றால் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனை அடுத்து புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். பின்னர் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் தோல்விகளை தான் சந்தித்தது.

ஜடேஜா தலைமையில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியானது. அதனால் சென்னை அணியின் கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் ஜடேஜா வழங்கிவிட்டார். அதன்பிறகு தோனியின் தலைமையில் விளையாடிய சென்னை அணி அதில் ஒரு வெற்றி ஒரு தோல்வியை பெற்றது.

இதனால் நடப்பு தொடரின் பிளே ஆப் சுற்றில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறும் நிலையில் சிஎஸ்கே அணி உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான், ஜடேஜா எடுத்த முடிவு குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். அதில், ‘ஒவ்வொரு வீரருக்கும் ஒரு அணியை எதிர்த்து விளையாடுவது பிடிக்கும். அந்த வகையில் பெங்களூரு அணிக்கு எதிராக எப்போதுமே ஜடேஜா சிறப்பாக விளையாடுவார். அந்த அணிக்கு எதிராக அவரது கேப்டன்சியும் நன்றாக இருந்தது. ஆனால் அதைத் மற்ற எந்த அணிக்கு எதிராகவும் அவரால் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை.

Graeme Swann support Jadeja decision to step down from CSK captaincy

கேப்டன்ஷி பொறுப்பில் இருக்கும்போது அதனை விட்டுக்கொடுப்பது பலராலும் முடியாது. ஏனென்றால் எப்போதுமே நமக்குள் இருக்கும் ஈகோ நம்மைத் தடுக்கும். ஆனால் ஜடேஜா சிஎஸ்கே அணியின் இந்த விவகாரத்தில் தனக்கு கேப்டன் பொறுப்பு சரியாக இருக்காது என்று கருதி அதை மீண்டும் தோனியிடமே வழங்கியது ஒரு சிறப்பான முடிவு.

அவர் எந்தவித ஈகோவும் இன்றி இந்த முடிவை எடுத்துள்ளது மகிழ்ச்சி. ஒரு சாதாரண வீரராக விளையாடும் போது நிச்சயம் அவரால் சிஎஸ்கே அணிக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியும் என்றுதான் உறுதியாக நம்புகிறேன்’ என கிரேம் ஸ்வான் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

RAVINDRA JADEJA, CSK, IPL, GRAEMESWANN

மற்ற செய்திகள்