"அவரோட 'பேட்டிங்' பாக்க குட்டி 'ஷேவாக்' மாதிரியே இருக்கு.." 'இளம்' வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்... "யாருப்பா அந்த 'பேட்ஸ்மேன்'??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் ப்ரித்வி ஷா ஆடி வருகிறார். இந்த முறை சில ஆட்டங்களில் அவர் பேட்டிங்கில் சொதப்பினாலும் இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார்.

"அவரோட 'பேட்டிங்' பாக்க குட்டி 'ஷேவாக்' மாதிரியே இருக்கு.." 'இளம்' வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்... "யாருப்பா அந்த 'பேட்ஸ்மேன்'??"

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான்(Graeme Swann), டெல்லி கேப்பிடல்ஸ் அணி குறித்தும், ப்ரித்வி ஷா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். 'டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சில நல்ல விஷயங்கள் உள்ளது. அதில் ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியும் ஒன்று. மிகவும் மகிழ்ச்சியான அணியாக டெல்லி உள்ள நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் சிறப்பாக அணியை வழி நடத்தி வருகிறார்.

டெல்லி அணியில் ப்ரித்வி ஷா பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் பார்க்க இளம் சேவாக் போல உள்ளது. எனக்கு இந்திய அணியில் மிகவும் பிடித்த வீரர் ஷேவாக் தான். அவரை போலவே ப்ரித்வி ஷா பேட்டிங் உள்ளது' என தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மற்ற செய்திகள்