"தோனி ஐபிஎல்ல இருந்து Retired ஆகப் போறாரா?, அப்படி ஆனா".. முன்னாள் கிரிக்கெட் வீரரின் அசத்தலான பதில்.. Exclusive!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் நடைபெறுவது போல தற்போது தென்னாப்பிரிக்காவில் வைத்து SA20 என்ற டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

"தோனி ஐபிஎல்ல இருந்து Retired ஆகப் போறாரா?, அப்படி ஆனா".. முன்னாள் கிரிக்கெட் வீரரின் அசத்தலான பதில்.. Exclusive!!

                            Images are subject to © copyright to their respective owners

மேலும் இதில் உள்ள அணிகளை ஐபிஎல் அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர்.

மொத்தம் ஆறு அணிகளும் இந்த லீக் தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் தற்போது பிரட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் தற்போது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியும் வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிப்ரவரி 11 ஆம் தேதியன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பிரட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த முதல் SA20 லீக் தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும், இதன் தலைவராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்மித் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது Behindwoods சேனலில் பிரத்யேக பேட்டி ஒன்றை கிரீம் ஸ்மித் அளித்துள்ளார். அதில், SA 20 தொடர் குறித்தும், தான் தலைவராக உள்ள பொறுப்பு குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம், தோனி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து ரிட்டையர்டு ஆகப்போவதாக கருத்துக்கள் இருப்பதாகவும் அப்படி ஓய்வு பெற்றால் SA 20 தொடரில் அவர் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

Graeme Smith about MS Dhoni entry in SA 20 league

இதற்கு பதிலளித்த ஸ்மித், "தோனியை விமான நிலையத்தில் சந்தித்த போது அவரிடம் பேசி இருந்தேன். அவர் சிஎஸ்கேவிற்கு மிக நெருக்கமானவர் என்பது தெளிவானது. தோனி என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாரோ, அதை செய்ய தகுதியானவர். அவர் இந்திய கிரிக்கெட்டிற்காகவும் உலக விளையாட்டுக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளவர். அவர் ஓய்வு பெற்று கடைசியாக ஒரு லீக் ஆட வேண்டும் என விரும்பினால் நாங்கள் அவர்களை நிறைந்த மனதுடன் வரவேற்போம்.

Graeme Smith about MS Dhoni entry in SA 20 league

Images are subject to © copyright to their respective owners

உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரராக எம்.எஸ் தோனி இருந்துள்ளார். அவர் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றாலும், இங்கே வரவேற்று சில நேரம் அவருடன் செலவிட விரும்புகிறோம். கோல்ஃப் உள்ளிட்ட வேறு ஏதாவது விளையாட்டுகளில் கூட அவர் ஈடுபடலாம்" என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

MSDHONI, GREAME SMITH, CSK, SA20

மற்ற செய்திகள்