"என்னோட சொந்த 'ஊர்' வந்துருக்கீங்க... சும்மா பட்டைய கெளப்புங்க..." 'இங்கிலாந்து' கிரிக்கெட் வீரர்களை வரவேற்று 'பிரபலம்' போட்ட 'ட்வீட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ள நிலையில், அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரை ஆடவுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முதலில் விளையாடவுள்ளது. அதன் பிறகு, டி 20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர் நடைபெறும் நிலையில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் வைத்து நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வேண்டி இங்கிலாந்து அணி சென்னை வந்தடைந்துள்ள நிலையில், இவர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆறு நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு, இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி முதல் பயிற்சியை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் சென்னை வருகை குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பகிர்ந்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். 'என்னுடைய சொந்த ஊருக்கு வருகை தரும் இங்கிலாந்து அணியை வரவேற்கிறேன். இந்த டெஸ்ட் தொடர் சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
Welcome to my hometown @englandcricket wish was there for the game, should be a great series https://t.co/BNRDOQnnyO
— Sundar Pichai (@sundarpichai) January 27, 2021
மற்ற செய்திகள்