"அட, என்னய்யா நீங்க.. முக்கியமான நேரத்துல இப்டி ஒரு தப்ப தான் பண்ணுவீங்களா??.. எல்லாம் வேஸ்ட்டா போச்சுல்ல.." 'டெல்லி' அணியை விமர்சித்த 'ஆகாஷ் சோப்ரா'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் நேற்று மோதிய ஐபிஎல் போட்டியில், பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.

"அட, என்னய்யா நீங்க.. முக்கியமான நேரத்துல இப்டி ஒரு தப்ப தான் பண்ணுவீங்களா??.. எல்லாம் வேஸ்ட்டா போச்சுல்ல.." 'டெல்லி' அணியை விமர்சித்த 'ஆகாஷ் சோப்ரா'!!

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 171 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் டிவில்லியர்ஸ், 5 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில், ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மயர் சிறப்பாக ஆடிய போதும், ஒரு ரன்னில் டெல்லி அணி தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலிலும் முன்னேற்றம் கண்டது. கிட்டத்தட்ட வெற்றி வாய்ப்பை டெல்லி அணி கோட்டை விட்ட நிலையில், இந்த போட்டியின் போது டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் எடுத்த முடிவு ஒன்று, கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது, கடைசி ஓவரை ஸ்டியோனிஸ் மூலம் வீசச் செய்தார் பண்ட். அதற்கு முன்பு வரை பந்து வீசாத ஸ்டியோனிஸ், கடைசி ஓவரை வீச வந்த நிலையில், பேட்டிங் நின்ற டிவில்லியர்ஸ் 3 சிக்ஸர்களுடன், 23 ரன்களை எடுத்தார். இந்த ஓவரில் ரன்கள் குறைவாக சென்றிருந்தாலே டெல்லி அணி வெற்றி பெற்றிருக்கலாம்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), டெல்லி அணியின் முடிவு குறித்து விமர்சனம் செய்துள்ளார். 'மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை எடுத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். அவரது நான்காவது ஓவரை முதலிலேயே கொடுத்து முடித்து விட்டு, ஆவேச கான், ரபாடா அல்லது இஷாந்த் ஷர்மாவிற்கு ஒரு ஓவர் மீதம் வைத்திருக்க வேண்டும்.

அப்படி நடந்திருந்தால், கடைசி ஓவரில் ஸ்டியோனிஸ் பந்து வீச வந்து, அத்தனை ரன்கள் கொடுத்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. ஒரு ரன்னில் வெற்றியைத் தவற விட்ட டெல்லி அணி, ஸ்டியோனிஸிற்கு கொடுத்த ஓவரை தவிர்த்திருந்தாலே, போட்டியில் வெற்றி பெற்று அசத்தியிருக்கலாம்' என ஒரே ஒரு தவறான முடிவால், டெல்லி அணி தோல்வி அடைந்ததாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்