அதே தப்பு.. கோலி இனிமேல் இப்படி பண்ணாதீங்க.. கடுப்பான கவாஸ்கர் கொடுத்த வார்னிங்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மீது சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்.
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. சிரிச்சிக்கிட்டே ரோஹித் சொன்ன வார்த்தை.. எகிறும் எதிர்பார்ப்பு..!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தலைவலி கொடுத்தது. இதில் ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 8 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனை தொடர்ந்து இஷான் கிஷனும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிசப் பந்த் 11 ரன்களில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்த சமயத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தது.
இந்த நிலையில் விராட் கோலியின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘தென் ஆப்பிரிக்காவில் எப்படி விளையாடினாரோ அப்படிதான் நேற்றைய ஆட்டத்திலும் கோலி விளையாடினார். ஷார்ட் பந்துகளை எதிர் கொள்ளும் போது அவர் கவனமுடன் ஆட வேண்டும். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் இதுபோல் விளையாடாமல் இருக்குமாறு அவரை எச்சரிக்கிறேன்’ என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்