'முன்னாடிலாம் இப்படி இல்ல.. கவாஸ்கர் தன் மகனை பல மாசமா பாக்கல!.. கோலி அப்பா இறந்தபோது ஆடினார்.. ஆனால் குழந்தை பிறப்புக்காக ..' - மூத்த கிரிக்கெட் பிரபலம் ‘சொன்னது’ என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் சூழ்நிலையில் கோலி தனது மனைவியின் பிரசவத்துக்காக முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பும் செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

'முன்னாடிலாம் இப்படி இல்ல.. கவாஸ்கர் தன் மகனை பல மாசமா பாக்கல!.. கோலி அப்பா இறந்தபோது ஆடினார்.. ஆனால் குழந்தை பிறப்புக்காக ..' - மூத்த கிரிக்கெட் பிரபலம் ‘சொன்னது’ என்ன?

மேலும் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் மாற்று வீரராக ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கோலின் விடுப்பு குறித்து பேசியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாட்டில் மூத்த விளையாட்டு எழுத்தாளரான அயாஸ் மேனனுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கோலி விளையாடுவது குறித்து கபில்தேவ் உரையாடியுள்ளார்.

Gavaskar didnt see his son for months, Kapil dev on Kohli leave

அதில், “முன்னாடி எல்லாம் எங்களால் இப்படி போய்விட்டு வர முடியாது. கவாஸ்கர் தன் மகனை பல மாதங்களாக பார்க்க முடியாத சூழல் இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. கோலி தன் அப்பா இறந்த போது அடுத்த நாளே ஆட வந்தார். இப்போது அவர் குழந்தை பிறப்புக்காக விடுப்பு எடுக்கிறார். இப்போது அப்படி செய்ய முடிகிறது என்பது நல்லதுதான். இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்கள் எதிர்பாராத நினைத்துப் பார்க்காத சலுகைகள் வாரி வழங்கப்படுகிறது. இவர்களால் ஒரு விமானத்தை வாங்கி தங்கள் குடும்பத்தை பார்த்து விட்டு மூன்று நாட்களில் திரும்ப முடிகிறது, கிரிக்கெட்டின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்கிறேன். கோலிக்கு கிரிக்கெட்டில் உள்ள ஆர்வத்தை விட குழந்தையை கையில் ஏந்துவதில்தான் ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதை உணர்கிறேன். மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்