"இந்த 4 டீமும் Playoff-க்குள்ள போய்டும்".. ஆரூடம் சொன்ன கவாஸ்கர் மற்றும் ஹைடன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுனில் கவாஸ்கர் மற்றும் மேத்தீவ் ஹைடன் ஆகியோர் இந்த வருட ஐபிஎல் தொடரில் Playoffs சுற்றுக்கு தகுதிபெறும் 4 அணிகளை கணித்துள்ளனர்.
ஐபிஎல்
கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் களம் கண்டு வருகின்றன. மெகா ஏலத்தின் காரணமாக வீரர்கள் அணி மாறி இருப்பதால் ரசிகர்களிடையே கூடுதல் சுவாரஸ்யம் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்தீவ் ஹைடன் ஆகியோர் இந்த வருட ஐபிஎல் தொடரில் Playoffs செல்ல வாய்ப்பு அதிகம் உள்ள 4 அணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
கவாஸ்கர்
கடந்த மூன்று வருடங்களில் அணிகளின் வெற்றி விகிதத்தின் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய நான்கு அணிகள் Playoffs செல்ல வாய்ப்பு அதிகமிருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"நிச்சயமாக மும்பை இந்தியன்ஸ். டெல்லி கேப்பிட்டல்ஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் முன்னேறிய விதம் சுவாரஸ்யமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். மற்றொரு சிறப்பான அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஜடேஜாவுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த 4 அணிகளும் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என நம்புகிறேன்" என்றார்.
ஹைடன்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார் ஹைடன்
இதுகுறித்து அவர் பேசுகையில்," நான் முதல் நான்கு இடங்களில் பார்க்க விரும்பும் முதல் அணி சிஎஸ்கேதான். நான் பட்டியலில் டெல்லியையும் அதன் பிறகு கொல்கத்தாவையும் வைத்திருப்பேன். பின்னர் கடந்த ஆண்டைப் போலவே, ஆர்சிபிக்கு நல்ல பலம் இருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே இவை எனது முதல் நான்கு தேர்வுகள்” என்றார்.
ஹைடன், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்