"இனி எந்த இந்திய கேப்டனும் பண்ண முடியாது".. தோல்விக்கு பின் கம்பீர் சொன்ன 'அதிரடி' கருத்து!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர் 12 சுற்றில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா திகழ்ந்ததால் நிச்சயம் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர்.
ஆனால், அரையிறுதி போட்டியில் எல்லாமே தலைகீழாக மாறி போனது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டுகள் எதையும் இழக்காமல், 16 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினர்.
8 வது டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நவம்பர் 13 ஆம் தேதி மோத உள்ளது. இதனிடையே, சிறந்த அணியாக இருந்த போதும் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கூட எடுக்க முடியாமல் போனதால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்தனர் .
இந்திய அணியின் தோல்வி குறித்து பலரும் பல விதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீரும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பேசி இருந்த கம்பீர், "சில பேர் வந்து ரோஹித் ஷர்மா அடித்தது போல இரண்டு இரட்டை சதங்களையோ அல்லது அதற்கு மேலாகவோ அடிக்கலாம். அதே போல, கோலியை விட அதிக சதங்களை கூட யாரவது அடிக்க முடியும். ஆனால் எந்த இந்திய கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய கேப்டனாக இருந்த தோனி தலைமையில் இந்திய அணி, 20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றையும் முறையே 2007, 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் கைப்பற்றி உள்ளது. மூன்று கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனும் தோனி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சூழலில், இனி எந்த இந்திய கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாது என கம்பீர் தெரிவித்துள்ள விஷயம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | "மேட்ச் ஆரம்பிச்சதும் வீரர்கள் ஒண்ணு சொன்னாங்க".. தோல்விக்கு பின் மனம்திறந்த டிராவிட்!!
மற்ற செய்திகள்