'ஐபிஎல்' மொத 'மேட்ச்'ல இவங்க ஜெயிக்குறதுக்கு... தான் சான்ஸ் 'அதிகம்',,.. 'கம்பீரின்' கணிப்பு மெய்யாகுமா??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
கொரோனா தொற்றின் காரணமாக, ரசிகர்கள் யாருக்கும் மைதானத்தில் போட்டியைக் காண அனுமதி இல்லாத நிலையில், இந்த ஐபிஎல் சீசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே வேளையில், தொடக்க போட்டியிலேயே ஐபிஎல் தொடரின் சிறந்த அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.
இந்நிலையில், முதல் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 'முதல் போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த பும்ரா மற்றும் போல்ட் ஆகியோரின் பந்து வீச்சைக் காண ஆவலுடன் உள்ளேன். இருவருமே உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள். இரண்டு பேரும் சென்னை அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள்' என தெரிவித்தார்.
மேலும், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இல்லாதது மிகப் பெரிய பின்னடைவாகும். அவரது இடத்தை நிரப்புவது மிகக் கடினம். சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் களமிறங்குவார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் மிகவும் வலுவாக உள்ள மும்பை அணி, சென்னை அணிக்கு எதிராக நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும்' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்