"இதுதான் 'தோனி'யோட 'ஸ்பெஷல்'!... எப்படி மாஸ்டர் பிளான் போட்டாரு பாத்தீங்களா??..." புகழாரம் சூட்டிய 'கம்பீர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்பதால் அனைவரும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

"இதுதான் 'தோனி'யோட 'ஸ்பெஷல்'!... எப்படி மாஸ்டர் பிளான் போட்டாரு பாத்தீங்களா??..." புகழாரம் சூட்டிய 'கம்பீர்'!!

இந்தாண்டு நடைபெறவிருக்கும் 14 ஆவது ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன் ஐபிஎல் ஏலம் நடக்கவுள்ளது. இதற்காக, 8 ஐபிஎல் அணிகளும் எந்தெந்த வீரர்களை அணியில் தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதையும், எந்தெந்த வீரர்களை வெளியேற்றப் போகிறார்கள் என்பதையும் சில தினங்களுக்கு முன் அறிவித்து விட்டது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முரளி விஜய், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, வாட்சன், மோனு சிங் உள்ளிட்ட வீரர்களை வெளியேற்றி மற்ற வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், சென்னை அணியின் இந்த செயல்பாட்டை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாராட்டிக் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

'சென்னை அணியில் ஐந்து வீரர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்றபடி, வாட்சன் ஓய்வு காரணமாக விலகியுள்ளார். மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. இது தான் தோனியின் ஸ்பெஷல். அணிக்கு என்ன தேவையோ, அதற்கு ஏற்றது போல முடிவு எடுப்பவர் தோனி தான் என எப்போதும் நான் சொல்வேன். அது தற்போதும் நடந்துள்ளது.

மற்ற ஐபிஎல் அணிகள் அனைத்தும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்யும் நிலையில், தோனி இந்த சீசனை மட்டுமே நினைவில் வைத்து அணியில் மாற்றங்களை உருவாக்கியுள்ளார். இந்த சீசனில் சென்னை அணியில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என அனைவரும் கூறி வந்த நிலையில், அணியில் ஆடும் லெவன் வீரர்களை மட்டும் யோசிக்காமல் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் வீரர்களையும் சேர்த்து யோசித்து சென்னை அணி குறைந்த வீரர்களை வெளியேற்றியுள்ளது. இது தான் தோனியின் தொழில்முறை யுக்தி' என கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்