'ஹாஸ்பிடலில் படுக்கை இல்லைன்னு அனுப்பிட்டாங்க'... ‘ட்ரீட்மெண்ட்டே நின்னுடுச்சு’.. இந்திய கிரிக்கெட் வீரர் செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் வீரராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் கவுதம் கம்பீர். பாஜகவின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய, விளையாட்டில் இருந்து அரசியலுக்கு வந்தோர்களின் பட்டியலில் கவுதம் கம்பீர் முக்கியமானவராக இருக்கும் நிலையில், அவர் ட்விட்டர் மூலம் தன்னிடம் உதவி கேட்ட பெண்ணுக்கு உதவியுள்ளார்.
தனது தந்தையிம் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு உதவி புரிவதற்கு யாருமே இல்லை, ஆதலால் உதவி செய்யுங்கள் கவுதம் கம்பீர் என்றும், தனது தந்தையின் உடலுறுப்புகள் பலவீனமடைந்ததாக் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுப்பதில், பொருளாதார சிரமம் இருப்பதாகவும் அந்த பெண்ணான உன்னதி மதன் கூறியுள்ளார்.
His treatment has been stopped because I can't afford private treatment. He is the only one me and my 11 yo brother have. Please help us @GautamGambhir sir. Please help us in arranging a bed for him in aiims
— Unnati Madan (@unnati_madan) September 15, 2019
முன்னதாக தனது தந்தையை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், ஆனால் அங்கு நோயாளிக்கான படுக்கை இல்லை என்பதால் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டியதாகவும், புளோரின் தளத்தில் நோயாளிகளை வைத்துக்கொள்ளச் சொல்வதாகவும் குறிப்பிடும் அந்த பெண், தனக்கு உதவுமாறு கவுதம் கம்பீரிடம் கேட்கிறார்.
அதைப் பார்த்த கம்பீர் உடனே, அவரது போன் நம்பரை அனுப்பச் சொல்லி கேட்கிறார். அவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
@GautamGambhir Sir I need help. my father needs help. He is suffering from CLD and a body infection which is damaging his main organs. He was admitted in aiims for 48 hours, however, was released because of unavailability of bed.
— Unnati Madan (@unnati_madan) September 15, 2019