"இவ்ளோ தான் 'பாஸ்' விஷயம்... இத போய் எதுக்கு இழுத்துக்கிட்டு??..." வெடிக்கும் 'கோலி' - 'ரோஹித்' விவகாரம்... ஈஸி 'ஐடியா' கொடுத்த 'கம்பீர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி மீது கடுமையான புகார்கள் எழுந்துள்ளது.

"இவ்ளோ தான் 'பாஸ்' விஷயம்... இத போய் எதுக்கு இழுத்துக்கிட்டு??..." வெடிக்கும் 'கோலி' - 'ரோஹித்' விவகாரம்... ஈஸி 'ஐடியா' கொடுத்த 'கம்பீர்'!!!

ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் ஷர்மா இல்லாமல் போனது தான் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. ரோஹித் ஷர்மா காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், கோலி வேண்டுமென்றே தான் ரோஹித்தை அணியில் இருந்து நீக்கினார் என்று ஒரு புறம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. Gautam gambhir gives easy idea to solve rohit sharma issues

இந்நிலையில், முதல் ஒரு நாள் போட்டிக்கு முன்னர், ரோஹித் அணியில் இடம்பெறாமல் போனது குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை என கோலி கருத்து தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய போட்டிக்கு முன்னர் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் வீடியோ காலில் பேசியதாக தகவல்கள் பரவி வருகிறது. அப்போது, ரோஹித் மீண்டும் அணியில் இடம்பெறுவது குறித்தும்  விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.Gautam gambhir gives easy idea to solve rohit sharma issues

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், 'கோலி, ரோஹித் ஆகியோர் மீது எந்த தவறுமில்லை. அதே போல, ரோஹித் விவகாரத்தில் அதிகம் பேர் சேர்ந்து விவாதிக்க வேண்டிய தேவையில்லை. தலைமை பிசியோ, அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுத் தலைவர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பேசி முடிவு எடுத்தாலே போதும். இப்படி எளிதாக இந்த விஷயத்தை கையாள வேண்டும். இதில் விவாதிக்கப்படும் விஷயங்களை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மூலம் கோலி அறிந்து கொள்ள வேண்டும்' என கம்பீர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மற்ற செய்திகள்