இனிமேல் இவரை தக்க வைக்காதீங்க.. பேசாம அந்த 3 பேரை டீம்ல வச்சிக்கோங்க.. RCB அணிக்கு கம்பீர் கொடுத்த அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்க்க வைக்க வேண்டிய வீரர்கள் குறித்து கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இனிமேல் இவரை தக்க வைக்காதீங்க.. பேசாம அந்த 3 பேரை டீம்ல வச்சிக்கோங்க.. RCB அணிக்கு கம்பீர் கொடுத்த அட்வைஸ்..!

ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியதில்லை. அதனால் இந்த ஆண்டு அந்த அணி கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.

Gautam Gambhir feels AB de Villiers might not be retained by RCB

அதன்படி லீக் போட்டிகளில் பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றது. ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தாவிடம் பெங்களூரு அணி தோல்வியடைந்தது. இதனால் இந்த முறையும் பெங்களூரு அணியின் ஐபிஎல் கோப்பை கனவு நிறைவேறாமல் போனது.

Gautam Gambhir feels AB de Villiers might not be retained by RCB

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, அடுத்த ஆண்டு 2 புதிய அணிகள் இடம்பெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனால் அனைத்து அணியிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என கூறப்படுகிறது.

Gautam Gambhir feels AB de Villiers might not be retained by RCB

இந்த நிலையில் பெங்களூரு அணி தக்க வைக்க வேண்டிய வீரர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘என்னைப் பொறுத்தவரை இனி எபி டிவில்லியர்ஸை தக்க வைப்பது என்பது தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் விளையாடுவார் என்று தெரியாது. தற்போது பேட்டிங்கிலும் அவர் தடுமாறுகிறார்.

Gautam Gambhir feels AB de Villiers might not be retained by RCB

ஆனால் விராட் கோலி, மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் இன்னும் சில ஆண்டுகள் பெங்களூரு அணிக்காக விளையாடுவார்கள். அதனால் இவர்கள் இவரை முதலில் தக்க வைத்துக் கொள்ளலாம். பின்னர் 3-வதாக சுழற்பந்து வீச்சாளர் சாஹலை தக்க வைக்கலாம். இவர்கள் மூவர்தான் இனி வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்’ என கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்