MKS Others

'இவர்' கைகளில் இந்திய அணி பத்ரமாகவே இருக்கும்..!- கம்பீருக்கு என்ன கோபம்… இப்படி பேசயிருக்காரே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ‘கேப்டன்ஸி சர்ச்சையில்’ சிக்கி தள்ளாடி வருகிறது. ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி, எந்த வித முன் அறிவிப்புமின்றி நீக்கப்பட்டது தான் சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்தன. அவருக்கு பதிலாக இனி டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளுக்கு ரோகித் சர்மா, கேப்டனாக செயல்பட உள்ளார்.

'இவர்' கைகளில் இந்திய அணி பத்ரமாகவே இருக்கும்..!- கம்பீருக்கு என்ன கோபம்… இப்படி பேசயிருக்காரே..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன. ஒரு தரப்பு, ‘இந்தியாவின் மிகச் சிறந்த வீரர் கோலி. அணிக்காக அவர் தலைமை பொறுப்பு வகித்து பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். அப்படி பட்டவர் அவமதிக்கப்பட்டு விட்டார்’ என்று சொல்லப்படுகிறது.

Gautam Gambhir expresses his thoughts on team India's captaincy

இதற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, "டி20 கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் நான் தனிப்பட்ட முறையில் தெரிவித்துக் கொண்டேன். ஆனால், டி20 கேப்டன் பொறுப்புத் தனக்கு அதிக பளுவைக் கொடுப்பதாக அவர் கருதினார். அவரின் எண்ணம் தவறானதில்லை. இந்தியாவுக்காக அவர் மிகச் சிறந்த வீரராக இருந்துள்ளார்.

இந்தியாவின் கேப்டனாக அவர் பல காலம் செயல்பட்டு வந்துள்ளார். இப்படியான அதிக காலம் பிடிக்கும் வேலைகளில் இதைப் போன்ற எண்ணங்கள் வருவது சகஜம் தான். நானும் இந்திய அணிக்கு மிக நீண்ட காலம் கேப்டனாக இருந்துள்ளேன். என்னால் அவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய தேர்வாளர்களைப் பொறுத்தவரை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ஒரேயொரு கேப்டன் மட்டும் தான் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதனால் தான் ரோகித்துக்கு இரண்டு ஃபார்மட்டுகளின் கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டன" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

Gautam Gambhir expresses his thoughts on team India's captaincy

பிசிசிஐ-யின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்திலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் பேசியுள்ளார். அவர், "தற்போது இந்திய அணிக்கு இரண்டு வித கேப்டன்கள் இருப்பது நல்ல விஷயம் என்று கருதுகிறேன். டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளில் அணியைத் திறம்பட உருவாக்குவதிலும் வழிநடத்துவதிலும் ரோகித்துக்குப் போதுமான கால அவகாசம் கிடைக்கும்.

ரோகித் சர்மா, ஒரு கேப்டனாக இந்தியாவுக்காக சிறப்பாக செயல்படுவார் என நான் நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளில் இந்திய அணி மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளன. இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் ரோகித். அது நமக்கு உணர்த்துவது ஒன்று தான். மற்ற கேப்டன்களை விட ரோகித் எதையோ ஒன்றை மிகச் சரியாக செய்கிறார்.

Gautam Gambhir expresses his thoughts on team India's captaincy

ரோகித் எப்போதும் சாந்தமாகவும் அமைதியாகவும் செயல்படக் கூடியவர். இதனால் தன்னைச் சுற்றி அனைத்தையும் ரிலாக்ஸாக வைத்திருப்பார். அவர் எப்போதும் தனக்கு கீழ் விளையாடும் வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க மாட்டார். அவர் பொதுவாகவே ரிலாக்ஸாக இருக்கும் கேரக்டர் என்பதால் மொத்த அணியும் அதிலிருந்து பயன் பெறும்" என்று கூறியுள்ளார்.

ஒரு விதத்தில் ரோகித்தை கம்பீர் புகழ்ந்து பேசியிருந்தாலும், மறைமுகமாக கோலியை விமர்சிக்கும் வகையிலேயே கருத்து கூறியுள்ளார். இதற்கு முன்னரும் விராட் கோலியின் கேப்டன்ஸி குறித்துப் பல முறை சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் கவுதம் கம்பீர்.

CRICKET, விராட் கோலி, ரோகித் சர்மா, கங்குலி, GAMBHIR, KOHLI

மற்ற செய்திகள்