"இந்த ஒரு விஷயத்துக்காக அஸ்வின் பால் போட்டாலே புடிக்காது.." 'கம்பீர்' பகிர்ந்த சீக்ரெட்.. "கரெக்ட்டா தான் சொல்லி இருக்காப்ல"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரவிச்சந்திரன் அஸ்வினின் பந்து வீச்சு குறித்து, கவுதம் கம்பீர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'பலூன்' விற்ற இளம் பெண்.. ஒரே ஒரு ஃபோட்டோவால் ஓஹோவென மாறிய வாழ்க்கை... சிலிர்க்க வைக்கும் பின்னணி
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பிய இந்திய வீரர் ஜடேஜா, ஆட்ட நாயகன் விருதினைத் தட்டிச் சென்றார்.
சாதனை படைத்த அஸ்வின்
அதே போல, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து, 6 விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவை முந்தி சாதனை படைத்தார். இதற்கு முன்பு, ஹர்பஜன் சிங்கை விட அதிக விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், தற்போது கபில்தேவையும் தாண்டி, கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக, அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் பட்டியலில், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
அஸ்வின் - ஹர்பஜன் சிங்
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் சுழற்பந்து வீச்சினை ஒப்பிட்டு சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'ஒரு பேட்ஸ்மேனாக, ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்து வீச்சை எதிர்கொள்வதை நான் வெறுப்பேன். ஆனால், ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சை நான் ரசித்து பார்ப்பேன். இதற்கு காரணம், ஒரு இடதுகை பேட்ஸ்மேனான என்னை, அஸ்வின் எளிதில் அவுட் செய்து விடுவார் என்பது தான். ஆனால், ஒரு வல்லுனராக, ஹர்பஜனிடம் சிறந்த பவுன்ஸ் மற்றும் தூஸ்ரா பந்துகள் உள்ளதாக நான் கருதுகிறேன்.
நிறைய வித்தியாசங்கள்
அதே வேளையில், ஒரு ஒரு இடதுகை பேட்ஸ்மேன் அல்லது எந்த பேட்ஸ்மேன் ஆனாலும், அஸ்வினின் பந்துகளை எதிர்கொள்வது மிக மிக கடினம். ஏனென்றால், அவர் வீசும் பந்தின் துல்லியம் மற்றும் அதன் வேகத்தில் நிறைய வித்தியாசங்களை அவர் வெளிப்படுத்துகிறார். இன்னொரு பக்கம், ஹர்பஜன் சிங் வீசும் பந்துகளை பார்ப்பது என்பது மிகவும் பிடித்த விஷயம்" என கம்பீர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்