"என்ன இப்படி ஒரு முடிவ எடுத்து வெச்சு இருக்காங்க??.." 'கங்குலி'யை கடுப்பாக்கிய 'செய்தி'.. வெளியான தகவலால் 'பரபரப்பு'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளாராக செயல்பட்டு வந்த டபுள்யூ.வி. ராமனின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக ரமேஷ் பவாரை மீண்டும் மதன்லால் தலைமையிலான தேர்வுக் குழு நியமித்தது.

"என்ன இப்படி ஒரு முடிவ எடுத்து வெச்சு இருக்காங்க??.." 'கங்குலி'யை கடுப்பாக்கிய 'செய்தி'.. வெளியான தகவலால் 'பரபரப்பு'!!

கடந்த 2018 ஆம் ஆண்டு வரை மகளிர் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டு வந்த நிலையில், இந்திய அணியின் கேப்டனான மிதாலி ராஜுடன், பவாருக்கு மோதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில், இந்திய அணி டி 20 உலக கோப்பை போட்டியில், அரை இறுதி வரை முன்னேறியிருந்தது. அப்போது தான், இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட, அது மிகப்பெரிய பிரச்சனை ஆனது.

இருவரும் மாறி மாறி, குற்றம் சுமத்திய நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் வட்டாரத்தில், மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, ரமேஷ் பவார் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி, அவருக்கு பதிலாக டபுள்யூ.வி. ராமன் (WV Raman), புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ராமனின் பயிற்சியில், கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை போட்டியில், இறுதி போட்டி வரை இந்திய அணி முன்னேறியிருந்தது.

இந்நிலையில், டபுள்யூ.வி. ராமனை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கியதால், பிசிசிஐ தலைவரான கங்குலி, அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டி 20 உலக கோப்பை போட்டியில் முன்னேற காரணமாக இருந்த ராமனின் பதவிக் காலத்தை நீட்டிக்காமல், அவரை மாற்றும் படி, ஆலசோனைக் குழு (CAC) எடுத்த முடிவால், கங்குலி அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ரமேஷ் பவாரை பயிற்சியாளராக நியமித்தது பற்றி, கங்குலி எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்தி வந்த  டபுள்யூ.வி. ராமன், அதற்கு முன்பாக தமிழ்நாடு மற்றும் பெங்கால் ஆகிய மாநில அணிகளுக்கும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்