“நாங்க அப்பவே வேண்டாம்னு சொன்னோம்.. ஆனா கோலி தான் கேட்கல”.. கேப்டன்சி சர்ச்சை பற்றி கங்குலி முதல்முறையாக கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் அவர்களின் விளக்கம் கொடுத்துள்ளார்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை எடுத்து வரும் டிசம்பர் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
\
இதனுடைய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலக வேண்டும் என்று பிசிசிஐ அதிகாரிகள் நிர்பந்தித்தாக கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் நேற்று திடீரென ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் என்பதும் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் ஒருமித்த முடிவு. டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்த போது நாங்கள் அவரை விலக வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால் அவர் கேட்கவில்லை. அவர் கூறியபடியே டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கோலியின் இந்த முடிவு தேர்வாளர்களுக்கு சரியானதாகத் தோன்றவில்லை.
ஒயிட் பால் (டி20, ஒருநாள்) கிரிக்கெட்டுக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதினர். அதனால்தான் ரோகித் ஷர்மாவிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியே கேப்டனாக செயல்பட முடிவு எடுத்துள்ளோம்’ என கங்குலி கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்