‘சந்தேகமே வேணாம்’... ‘கோலிக்கு பதில் அவர கேப்டனா நியமிங்க’... ‘வலுக்கும் ஆதரவு குரல்கள்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை, இந்திய அணியின் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

‘சந்தேகமே வேணாம்’... ‘கோலிக்கு பதில் அவர கேப்டனா நியமிங்க’... ‘வலுக்கும் ஆதரவு குரல்கள்’...!!!

அமீரகத்தில் நடைபெற்று வந்த 13-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய இப்போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-ஆவது முறையாக கோப்பையை வென்றது. போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ரோகித் ஷர்மா குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், 'சந்தேகமே படாமல் , ரோகித் ஷர்மாவே 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும். அணியை திறம்பட வழிநடத்தக்கூடிய சிறப்பான மனித மேலாளர் மற்றும் லீடர். 20 ஓவர் போட்டிகளில் எப்படி வெல்ல வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிந்துள்ளது. இது விராட் கோலிக்கும் நெருக்கடியை குறைத்து, களத்தில் வீரராக மட்டுமே செயல்பட வாய்ப்பளிக்கும்.Gambhir, Vaughan call for Rohit’s elevation to India’s T20 captaincy

உலகம் முழுவதும் உள்ள பல கிரிக்கெட் அணிகளில் இது போன்ற நடைமுறை வெற்றிகரமாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடினால் கண்டிப்பாக கோப்பையை வெல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளதாவது, ‘நாம் ஏன் தோனியை, இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன் என்று அழைக்கிறோம்.

Gambhir, Vaughan call for Rohit’s elevation to India’s T20 captaincy

ஏனெனில் அவர், 2 உலகக் கோப்பை மற்றும் 3 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். இதேபோல், ரோகித் சர்மா, 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சிறப்பான கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார். அவரை இந்திய அணியின் வைட் பால் கேப்டனாகவோ அல்லது டி20 கேப்டனாகவோ நியமிக்காதது வெட்கக்கேடானது’ என்று கம்பீர் கொந்தளித்துள்ளார். ரசிகர்களும் இதனையே வலியுறுத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்