‘வெட்கக்கேடு’!.. இதுதான் உங்க ஸ்பிரிட் ஆஃப் கேமா..? வார்னரை விட்டு விளாசிய முன்னாள் ‘இந்திய’ வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை செயலை இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை (T20 World Cup) போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 19 ஓவர்களில் 177 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா நுழைந்துள்ளது.
இந்த நிலையில், இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (David Warner) அடித்த சிக்சர் ஒன்று விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதில் போட்டியின் 8-வது ஓவரை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் (Mohammad Hafeez) வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை வீசும் போது பந்து கை நழுவி சென்றுவிட்டது. இதனால் பந்து மைதனாத்தில் இரண்டு தடவை குத்திச் சென்றது.
அப்போது வேகமாக ஓடி வந்த டேவிட் வார்னர், அதை சிக்சருக்கு விளாசினார். அம்பயரும் இதற்கு சிக்சர் கொடுத்துவிட்டு, அதை நோ பால் என அறிவித்தார். விதிப்படி வார்னர் அடித்தது சரியென்றாலும், கிரிக்கெட் உணர்வுக்கு எதிரான என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
What an absolutely pathetic display of spirit of the game by Warner! #Shameful What say @ashwinravi99? pic.twitter.com/wVrssqOENW
— Gautam Gambhir (@GautamGambhir) November 11, 2021
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir), டேவிட் வார்னரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘கிரிக்கெட் உணர்வு இல்லாமல் வார்னர் வெளிப்படுத்திய மோசமான செயல். இது வெட்கக்கேடானது’ என கௌதம் கம்பீர் ட்வீட் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்