"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல... என்ன இந்த மனுஷன் இப்டி சொல்லிட்டாரு..." 'கம்பீர்' சொன்ன 'பரபரப்பு' கருத்து!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு சொந்த மண்ணிற்கு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்து அணியை இந்தியாவில் வைத்தே எதிர்கொள்ளவுள்ளது.

"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல... என்ன இந்த மனுஷன் இப்டி சொல்லிட்டாரு..." 'கம்பீர்' சொன்ன 'பரபரப்பு' கருத்து!!!

இதில் முதற்கட்டமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், அடுத்த இரண்டு போட்டிகள் அகமதாபாத் மைதானத்திலும் வைத்து நடைபெறவுள்ளது.

இதற்காக, சென்னை வந்துள்ள இங்கிலாந்து அணி, தீவிரமாக தயாராகி வருகிறது. முன்னதாக, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று முடித்த கையோடு இந்தியாவிற்கு வந்துள்ளது. அதே நேரத்தில், மறுபக்கம் ஆஸ்திரேலிய மண்ணிலேயே வைத்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியை சொந்த மண்ணிலேயே எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், இந்த தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கணித்து கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். 'இந்திய அணி இந்த தொடரை 3 - 0 அல்லது 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றும். இங்கிலாந்து அணி பெறும் அந்த ஒரு வெற்றியும், பகலிரவு போட்டிகளில் மட்டுமே கிடைக்க அதிக வாய்ப்பாக அமையும். அதிலும், 50 - 50 தான். மற்றபடி, இங்கிலாந்து அணி தொடரை வெல்ல வாய்ப்பேயில்லை.

இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அதிகம் விளையாடாதது பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் எவ்வளவு முக்கியமானது என்பது அவருக்குத் தெரியும். இந்த தொடரை இந்திய அணி வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியால் கலந்து கொள்ள முடியும். இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக ஆடியிருந்தார். ஆனால், இந்திய அணியில் பும்ரா, அஸ்வின் ஆகியோர் உள்ளதால் ஜோ ரூட்டிற்கு மிகவும் சவாலாகவே இருக்கும்.

போட்டி நடைபெறும் சென்னை மற்றும் அகமதாபாத் மைதானங்களில் சுழற்பந்து வீச்சு அதிகம் கைகொடுக்கும். ஆஸ்திரேலிய மைதானங்களில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசியுள்ளதால் அவருக்கு இந்திய மைதானங்களில் பந்து நன்கு சுழல வாய்ப்புள்ளது. அதே வேளையில், சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக எதிர்த்து ஆடும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்த திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியில் இல்லை என்பது தான் உண்மை. அதனால், இந்திய அணியே அதிக ஆதிக்கம் செலுத்தும்' என கம்பீர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னால் இந்திய அணியால் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்ல முடியாது என்றும், ஆஸ்திரேலிய அணியே அனைத்து போட்டிகளையும் வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கணித்திருந்தனர். ஆனால், அதனை இந்திய அணி ,மாற்றி எழுதியது. தற்போது கம்பீரும், இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தும் என தெரிவித்துள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்