'டெத் ஓவர் போடுறதுல ஆள் கில்லி தான்...' 'பழைய ஃபார்மை அப்படியே மெயின்டெயின் பண்றாரு...' - இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய கம்பீர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் சில ஆண்டுகள் காணாமல் போன பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் குறித்து செய்தியாளர் சந்திப்பில் கௌதம் கம்பீர் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஸ்வர் குமார், தொடர்ச்சியான காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து சில காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு எந்தவித போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாட வில்லை.
இடையிடையே சில ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிய புவனேஸ்வர், நீண்ட காலம் கழித்து தற்போது இங்கிலாந்து உடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நீண்டக்கால இடைவெளிக்கு பின் புவனேஸ்வர் எப்படி ஆடுவார் என்ற கேள்வியை உடைக்கும் வண்ணமாக, இந்திய முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் புவனேஸ்வர் குமார் பற்றி சில விஷயங்களை செய்தியாளர் இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், 'புவனேஸ்வர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஸ்வர் குமார் மொத்தமாக 2 விக்கெட்டுகளை மட்டுமே ஆனால் மறுபக்கம் அவரது ரன் ரேட் எகானமி 7.14 மட்டுமே. இதுதான் ஒரு பந்துவீச்சாளர்களுக்கு மிக மிக முக்கியமானது. அதுவும் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுகிறார்.
பந்துவீச்சாளர் வீசும் ஒவ்வொரு டாட் பந்துகளும் அணியின் வெற்றியை தீர்மானிக்கும். இதை புரிந்துகொண்ட புவனேஷ் குமார் குமார், தனக்கே உரிய பாணியில் சிறப்பாக செய்து வருகிறார். டி20 தொடரில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி கூட்டணி எதிரணியை கலங்கச் செய்யும் அளவிற்கு இருக்கும்.
பும்ரா மற்றும் சமி ஒரு பக்கம் விக்கட்டுகளை அதிகமாக வீழ்த்தி வந்தாலும் எக்கானமியில் புவனேஷ்வர் குமார் ஓர் எக்ஸ் பேக்டராக இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய வீரராக திகழ்வார்' என இந்திய முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்