கோலி இடத்துல இனி ‘இவர்’தான் விளையாடணும்..!- இளம் வீரரை தூக்கி நிறுத்தும் கம்பீர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 போட்டிகளில் இந்தியாவின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகிய பின்னர் தற்போது ரோகித் சர்மா தலைமை ஏற்றுள்ளார். ரோகித் தலைமையிலான அணி நேற்றைய முதல் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியை வென்றது.

கோலி இடத்துல இனி ‘இவர்’தான் விளையாடணும்..!- இளம் வீரரை தூக்கி நிறுத்தும் கம்பீர்..!

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என இரு தரப்பினர்களும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். புதிய மாற்றங்கள் உடன் களம் இறக்கப்பட்ட இந்திய அணியில் பல அறிமுக வீரர்கள் உட்பட இளம் வீரர்களுகளுக்கான முக்கியத்துவம் அதிகம் இருந்தது. பேட்ஸ்மேன்களில் நேற்றைய போட்டியில் அதிகப்படியாக கவனம் ஈர்த்தவர் சூர்யகுமார் யாதவ். 40 பந்துகளுக்கு 62 ரன்களை விளாசி இந்திய அணியை வெற்றியை நோக்கி நகர்த்திய பெருமை சூர்யகுமாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

Gambhir’s notion on placing this young player at Kohli’s spot

மேலும், நேற்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் 3-வது ஆளாக சூர்யகுமார் யாதம் களம் இறங்கினார். வழக்கமாக, மூன்றாவது பேட்ஸ்மேன் ஆக விராட் கோலி இறங்குவார். ஆனால், விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் அவருக்கு டி20 தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரிடத்தில் விளையாடிய சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தால் பல பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யகுமாரின் பேட்டிங் திறன் குறித்து முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் பேசியுள்ளார். குறிப்பாக, சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய போது கம்பீர் தான் அந்த அணியின் கேப்டன் ஆக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Gambhir’s notion on placing this young player at Kohli’s spot

சூர்யகுமார் குறித்து கம்பீர் கூறுகையில், “சூர்யகுமாரிடம் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. ஸ்பின் நல்ல விளையாடுகிறார். எந்த வகை பந்து வீசப்பட்டாலும் அதற்கு ஏற்றபடி 360 டிகிரியிலும் சுழன்று அடிக்கிறார். இதனால், சூர்யகுமாருக்கு பந்துவீச பவுலர்களுக்கு சிரமம் ஆக இருக்கும். அதனால், தான் விராட் கோலி விளையாடிய 3-வது ஆர்டரில் சூர்யகுமாரை தொடர்ந்து விளையாட விட வேண்டும் என விரும்புகிறேன். கோலி மீண்டும் அணிக்கு திரும்பினாலும் சூர்யகுமார் 3-வது ஆர்டரிலும் விராட் கோலி 4-வது ஆர்டரிலும் விளையாட வேண்டும் என்பது என் கருத்து.

இந்த ஆர்டரில் இந்திய அணி பேட்ஸ்மேன்களை களம் இறக்கினால் அவர்களின் ஆட்டம் சிறப்பாக இருக்கும். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். டாப் ஆர்டரில் இவர்கள் விளையாட அடுத்தடுத்து சூர்யகுமார், விராட் கோலி என இறக்க வேண்டும். 4-வது ஆர்டர் தான் அணியின் நங்கூரம். ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் எப்படியோ அதே இடத்தில் இந்தியாவுக்கு விராட் கோலி நிற்கலாம்.

Gambhir’s notion on placing this young player at Kohli’s spot

தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை இழக்கும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் நிற்கும் விராட் கோலி அணியை காப்பற்ற வசதியாக இருக்கும். கொல்கத்தா அணிக்காக நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய போது ஏன் சூர்யகுமாரை 3-வது பேட்ஸ்மேன் ஆக களம் இறக்கவில்லை என்பது இப்போதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அந்த சூழலில் எங்களிடம் மனிஷ் பாண்டே, யூசுஃப் பதான் ஆகிய வீரர்கள் இருந்ததால் சூர்யகுமாரை கடைசியில் ஆட்டத்தை முடித்துக் கொடுப்பவர் ஆக களம் இறக்க வேண்டியதாக இருந்தது.

ஐபிஎல் தொடரைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு சீசனுக்கும் வெவ்வேறு அணிகளுக்கு மாறலாம். ஆனால், கொல்கத்தா அணியின் சார்பாக சொல்வதென்றால் சூர்யகுமாரை அவர்கள் இழந்தது பெரிய இழப்பு தான்” எனப் பேசியுள்ளார்.

CRICKET, T20I, SURYAKUMAR YADHAV, VIRAT KOHLI

மற்ற செய்திகள்