"அவருக்கு எதுக்கு வாய்ப்பு??".. உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்.. கவுதம் கம்பீர் சொன்ன பரபரப்பு கருத்து!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆசிய கோப்பையில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.

"அவருக்கு எதுக்கு வாய்ப்பு??".. உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்.. கவுதம் கம்பீர் சொன்ன பரபரப்பு கருத்து!!

இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணிக்கு எதிராக ஆடவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, டி 20 உலக கோப்பை தொடரும் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்காக அனைத்து அணிகளும் தற்போதில் இருந்தே தீவிரமாக தயாராகி வருகிறது.

மேலும், டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆசிய கோப்பையில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள், உலக கோப்பை அணியிலும் இடம் பிடித்துள்ளனர். மறுபக்கம், இந்திய அணியின் தேர்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ள கருத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

பல ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் தனது திறனை நிரூபித்ததன் மூலம் மீண்டும் இந்திய அணிக்காக ஆடி வருகிறார். ஆசிய கோப்பையிலும் அவர் ஆடி இருந்த நிலையில், தற்போது டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் அவர் தேர்வாகி உள்ளார். ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் அணியில் இருப்பதால், யாருக்கு உலக கோப்பையில் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி பலரும் விவாதித்து வருகின்றனர்.

இது பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருந்த கவுதம் கம்பீர், "இருவரையும் ஒரே அணியில் விளையாட வைக்க முடியாது. அப்படி நடந்தால், ஆறாவது பவுலர் இல்லாமல் விளையாட வேண்டியிருக்கும். இல்லையெனில், சூர்யகுமார் அல்லது கே எல் ராகுல் என யாராவது மோசமாக ஆடும் போது, அவர்களுக்கு பதிலாக ரிஷப் பந்த்தை தொடக்க வீரராக களமிறக்க வைக்க வேண்டும். அது தான் ஒரே வழி.

ஒருவருக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால், ரிஷப்பிற்கு தான் வாய்ப்பளிக்க வேண்டும். ஏனென்றால் டாப் ஆர்டரில் ஆடவும் தினேஷ் கார்த்திக் ஆர்வம் காட்டுவதில்லை. அதே போல, 10 முதல் 12 பந்துகள் மட்டுமே ஆடும் வீரரை டி 20 போட்டிகளில் களமிறக்க கூடாது. அவர் போட்டியை வென்று தருவார் என எந்த உத்தரவாதமும் கிடையாது. விக்கெட் கீப்பர் என்றால், முதல் ஐந்து வீரர்களில் ஒருவராக களமிறங்க வேண்டும். அந்த விஷயம் பந்த்திடம் உள்ளது" என கவுதம் கம்பீர் கூறி உள்ளார்.

DINESHKARTHIK, GAUTAMGAMBHIR, T 20 WORLD CUP, RISHABH PANT

மற்ற செய்திகள்