VIDEO: ‘அம்பயரின் தவறான முடிவு?’.. கடுப்பில் ‘கோலி’ செய்த செயல்.. சர்ச்சையை கிளப்பிய விவகாரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுட்டான கோபத்தில் விராட் கோலி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘அம்பயரின் தவறான முடிவு?’.. கடுப்பில் ‘கோலி’ செய்த செயல்.. சர்ச்சையை கிளப்பிய விவகாரம்..!

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Frustrated Kohli hits boundary ropes with bat on his way to pavilion

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்த கூட்டணி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது அஜாஸ் படேல் வீசிய ஓவரில் சுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை அடுத்து வந்த புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

Frustrated Kohli hits boundary ropes with bat on his way to pavilion

இதனைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது அஜாஸ் படேல் வீசிய ஓவரில் பந்தை விராட் கோலி டிபன்ஸ் செய்தார். ஆனால் பந்து அவரது காலில் பட்டுச் சென்றது. அதனால் அம்பயர் அவருக்கு எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார்.

Frustrated Kohli hits boundary ropes with bat on his way to pavilion

உடனே 3-வது அம்பயரிடம் விராட் கோலி ரிவியூ கேட்டார். அப்போது பேட்டிலும், காலிலும் ஒரே நேரத்தில் பந்து பட்டது போல் இருந்தது. அதனால் 3-வது அம்பயரால் சரியான முடிவு எடுக்க முடியவில்லை. அதனால் அவரும் அவுட் என அறிவித்தார். இதனால் கோபமான விராட் கோலி களத்தில் நின்ற அம்யர்களிடம் இதுகுறித்து வாக்குவாதம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து பெவிலியன் திரும்பிய விராட் கோலி, பவுண்டரி லைனை கோபமாக பேட்டால் அடித்து விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIRATKOHLI, INDVNZ, UMPIRE

மற்ற செய்திகள்