செட்டிநாடு சிக்கன், பருப்பு குழம்பு..!- தென் ஆப்பிரிக்காவுல இந்திய அணி என்னென்ன சாப்டுறாங்கன்னு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி தற்போது தென் ஆப்பிரிக்காவில் செஞ்சூரியனில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் 3 நாள் ஆட்டம் நடந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணியினருக்கு என்னென்ன உணவு ரகங்கள் பரிமாறப்படுகிறது என்பது குறித்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.
நேற்றைய 2 நாள் போட்டியில் மதியம் இந்திய அணியினருக்கு இந்திய உணவுகள் பல பரிமாறப்பட்டுள்ளன. அதில் ப்ரொகோலி சூப், செட்டிநாடு சிக்கன், கடாய் காய்கறிகள், பருப்பு குழம்பு, மட்டன் சாப்ஸ் ஆகிய உணவு ரகங்கள் இடம் பெற்றுள்ளன. வட இந்தியா, தென்னிந்தியா என அத்தனை ரக இந்திய உணவுகளும் இந்திய கிரிக்கெட் அணியினருக்கு கொடுக்கப்படுகிறது.
இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கிய போது 3 விக்கெட்களுடன் இந்தியா இருந்தது. ஆனால் 100வது முடிவதற்குள் 9 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. கே.எல்.ராகுல் 123 ரன்கள், ரகானே 48 ரன்கள் எடுத்து ஆட்டத்தைவிட்டு வெளியேறினர். இந்திய அணி இன்று 400 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியினர் ரசிகர்களை ஏமாற்றினர்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 105.3 ஓவர்களுக்கு 327 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆட வந்த தென் ஆப்பிரிக்கா அணியினர் 3-வது நாள் ஆட்டத்தில் இதுவரையில் 47 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியினரின் அபாரமான பந்துவீச்சு இந்திய ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்