வார்னே அறைக்கு கடைசியாக வந்த '4' பெண்கள்.. மரணத்திற்கு முன்பான சிசிடிவி காட்சிகள்.. நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே, கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தாய்லாந்தில், சில நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த வார்னே, திடீரென மரணம் அடைந்ததால், அவரது மறைவில் மர்மம் இருப்பதாகவே பலரும் கருதினர்.
சுற்றுலா சென்ற ஒருவருக்கு திடீரென எப்படி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
4 பெண்கள்
இதனைத் தொடர்ந்து, இயற்கை முறையில் தான் ஷேன் வார்னே மறைந்தார் என்பது, பரிசோதனை முடிவுகள் மூலம் உறுதியானது. மேலும், உணவு பொருட்களும் ஒரு காரணம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், வார்னே இறப்பதற்கு முன்பாக, நான்கு பெண்களை அவர் அறைக்கு அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மசாஜ் செய்த பெண்கள்
இது பற்றி வெளியான தகவலின் படி, மார்ச் 4ம் தேதியன்று மதியம் 1.30 மணிக்கு, லாபியில் தனது கைகளில் புது துணிகளுடன், வார்னே நடந்து சென்றுள்ளார். அவர் உடல்நிலை சரியில்லை என்பது போன்ற ஒரு நிலையே தெரியவில்லை. அடுத்த சில மணித்துளிகளில், அதாவது மதியம் 1:53 மணிக்கு, 4 பெண்கள் மசாஜ் செய்ய வேண்டி, வார்னேவின் அறைக்கு வந்துள்ளனர்.
இதில், இரண்டு பேர் வார்னேவுக்கும், மற்ற இரண்டு பேர் வார்னேவின் நண்பருக்கும் மசாஜ் செய்யச் சென்றுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக, வார்னேவுடன் இருந்த அந்த பெண்கள், சுமார் 3 மணியளவில் அறையில் இருந்து வெளியே சென்றுள்ளதாக தெரிகிறது.
வார்னேவின் மறைவு
அவர்கள் சென்ற அடுத்த இரண்டரை மணி நேரத்திற்குள், அதாவது மாலை 5:15 மணிக்கு, வார்னே பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை நண்பர் பார்த்துள்ளார். அவருக்கு முதலுதவி செய்ய நண்பர் முயன்றும் தோல்வியில் முடிந்தது. பிறகு, மருத்துவர்கள் வந்து வார்னே மரணம் அடைந்ததை உறுதி செய்தனர்.
இயற்கை தான்
வார்னேவின் மரணம் இயற்கையான ஒன்று என்பது உறுதியாகியுள்ளதால், மசாஜ் செய்ய வந்த பெண்களை சந்தேகப்பட்டு பயனில்லை என்றும் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வார்னேவின் உடலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
அது மட்டுமில்லாமல், வார்னேவை உயிருடன் கடைசியாக சந்தித்த நபர்களும் அந்த பெண்கள் தான். முன்னதாக, வார்னேவின் கடைசி புகைப்படம் உள்ளிட்ட சில விஷயங்கள், ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வேதனை அடைய செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்