'முன்னேறி செல்வோம், உணர்வால் இணைவோம் என்று...' - தொடங்கியது 'ஒலிம்பிக்' திருவிழா...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நான்கரை மணிநேர தொடக்கவிழா பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகின்றது.
முன்னேறி செல்வோம், உணர்வால் இணைவோம் என தொடங்கியுள்ள விழாவை ஜப்பான் நாட்டு பேரரசர் நருஹிடோ தொடங்கி வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளின் வீரர்கள் அணிவகுப்பின் போது கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், மிகவும் முக்கிய விருந்தினர்களுக்கு மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
மொத்தம் நடக்கும் 33 போட்டிகளில் 339 தங்கப் பதக்கங்களுக்காக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 18 போட்டிகளில் பங்கேற்பதற்காக 127 போட்டியாளா்கள் அடங்கிய விளையாட்டு வீரர்கள் டோக்கியோ சென்றுள்ளனர்.
120 வருடங்களாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்தியா, இதுவரை மொத்தமாக 28 பதக்கங்களையே வென்றுள்ளது. அதிலும் தங்கப் பதக்கம் என்றால், கடந்த 2008-ஆம் ஆண்டு துப்பாக்கி சுடுதல் வீரா் அபினவ் பிந்த்ரா வென்ற ஒன்றே ஒன்று தான்.
இந்த ஒலிம்பிக்கில் அதிக அளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற தன்முனைப்போடு விளையாட உள்ளது. துப்பாக்கி சுடுதலில் களம் காணும் மானு பாக்கா், இளவேனில் வாலறிவன், திவ்யான் சிங் பன்வாா், ஐஸ்வா்ய பிரதாப் சிங் தோமா் ஆகியோா் பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை அளிக்கிறார்கள்.
இவா்கள் தவிர பளுதூக்குதலில் சாய்கோம் மீராபாய் சானு, வில் வித்தையில் தீபிகா குமாரி - அதானு தாஸ் தம்பதி, குத்துச்சண்டையில் மேரி கோம், அமித் பங்கால் உள்ளிட்டோா், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, பாட்மிண்டனில் பி.வி. சிந்து, டென்னிஸில் சானியா மிா்ஸா ஆகியோரும் விளையாட உள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல், இந்திய ஆடவா் மற்றும் மகளிா் ஹாக்கி அணியும் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு களம் காண்கிறது. இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக வாள்வீச்சில் தமிழக வீராங்கனை பவானி தேவியும், குதிரையேற்றத்தில் பௌவாத் மிா்ஸா ஆகியோா் ஈடுபடுகின்றனா்.
இந்த வருட ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சோந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, டேபிள் டென்னிஸ் வீரா்கள் சரத் கமல், ஜி.சத்தியன், தடகள போட்டியாளா்கள் ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ரேவதி வீரமணி, தனலட்சுமி சேகா், சுபா வெங்கடேசன், பாய்மரப்படகு போட்டியாளா்கள் நேத்ரா குமணன், கே.சி.கணபதி, வருண் தக்கா் ஆகியோர் நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு களம் காண்கின்றனர்.
மற்ற செய்திகள்