"இப்டி இருந்தா 'வேர்ல்டு கப்' கிடைக்குறது கஷ்டம் பாஸ்.." இந்திய அணியில் உள்ள பெரிய குறை.. முன்னாள் வீரர் கொடுக்கும் வார்னிங்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்க தொடரில், தோல்வியுடன் திரும்பி வந்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

"இப்டி இருந்தா 'வேர்ல்டு கப்' கிடைக்குறது கஷ்டம் பாஸ்.." இந்திய அணியில் உள்ள பெரிய குறை.. முன்னாள் வீரர் கொடுக்கும் வார்னிங்

இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட ஆரம்பித்தது முதல், இந்திய அணி ஏறுமுகத்திலேயே உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடர் என இரண்டையும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில் பங்கேற்றிருந்தது.

சிறப்பான பாதை

அந்த தொடரையும் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, தொடர்ச்சியாக மூன்று தொடர்களில் எதிரணியினரை வொயிட் வாஷ் செய்துள்ளது. ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி இந்தியாவிற்கு பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் இந்திய அணியை தேர்ந்த பாதையில் வழிநடத்தி வருகிறார் ரோஹித்.

சுழற்சி முறையில் அணி வீரர்களை பயன்படுத்துவது, ஃபீல்டிங் நிப்பாட்டுவது என அனைத்திலும் சிறந்த ஆளுமையுடன் அவர் செயல்பட்டு வருகிறார். அதே போல, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இருந்த குறையும் மாறி வருகிறது.

டி 20 உலக கோப்பை

இதனால், இந்தாண்டுஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையை, தற்போதைய நம்பர் 1 டி 20 அணியான இந்தியா தான் கைப்பற்றும் என்ற ஒரு கருத்து பரவலாக இருந்து வருகிறது. இதனிடையே, உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு முன்புள்ள ஒரு மிகப் பெரிய சவாலை பற்றி, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தாக்கம் இல்லை

'டி 20 போட்டிகளில், இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் எந்த குறையும் இல்லை. ஆனால், பவுலிங்கில் அவர்களிடம் அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. ஒரு மீடியம் வேகப்பந்து வீச்சாளர் தன்னுடைய பந்து வீச்சில், எத்தனை வேரியஷன்களை காட்டினாலும், டி 20 போட்டியில் எந்தவித தாக்கத்தையும் அது ஏற்படுத்தாது.

மீடியம் வேகப்பந்து வீச்சாளர்கள்

135 கி.மீ வேகத்திற்கு கீழ் பந்து வீசுவதால், பேட்ஸ்மேன்கள் ரன்களை அடித்து தான் குவிப்பார்கள். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில், 140 கி.மீ வேகத்திற்கு மேல் வீசும் பந்து வீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும். ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா மற்றும் ஐபிஎல் தொடரில் வேகமாக பந்து வீசி வரும் உம்ரான் மாலிக் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி தயார் செய்ய வேண்டும்.

கடினமான ஒன்று

மீடியம் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து, ஆஸ்திரேலியா போன்ற இடத்தில் உலக கோப்பைத் தொடரை இந்திய அணி வெல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று தான்' என சல்மான் பட் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் டெத் ஓவர்களில் உள்ள குறை பற்றி எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SALMAN BUTT, ROHIT SHARMA, T 20 WORLD CUP, INDIAN CRICKET

மற்ற செய்திகள்