“இவரு இந்தியா டீமுக்கு கிடச்ச மிகப்பெரிய சொத்து”.. தமிழக வீரரை தாறுமாறாக புகழ்ந்த சோயிப் அக்தர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் நடராஜனின் ஆட்டம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் அக்தர் பாராட்டி பேசியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர், தற்போது 15-வது சீசனாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடுவதன் மூலம் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் இந்திய அணியில் தேர்வாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘நடப்பு ஐபிஎல் தொடரில் நடராஜனின் ஆட்டம் மிகச் சிறப்பாக உள்ளது. அவரது பந்துவீச்சில் ஒரு தனித்துவம் உள்ளது. நிச்சயம் இந்திய அணிக்கு நடராஜன் மிகப்பெரிய பலமாக இருப்பார். அவரின் திறமை அறிந்து சரியாக பயன்படுத்தினால் இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நல்லது. நடராஜன் இந்திய அணியிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்து விளையாடும் நாளை நான் எதிர்பார்த்து காத்துள்ளேன்’ என சோயப் அக்தர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளை நடராஜன் தவறவிட்டார். காயத்தில் இருந்து மீண்ட அவர், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/
மற்ற செய்திகள்