"நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் தான்.." வெளிப்படையாக சொன்ன முன்னாள் கிரிக்கெட் வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமீப காலமாக, விளையாட்டு துறையை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பலரும், தாங்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்பதை பொது வெளியில், மிகவும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். அத்துடன், தங்கள் உறவில் இருக்கும் நபர் பற்றியும் தகவலை தெரிவித்தும் வருகின்றனர்.
Also Read | வீடு ஃபுல்லா கோடி கணக்குல பணம்.. "ஆனா அது என் பணமே இல்ல.." நடிகை விளக்கம்
கிரிக்கெட் துறையில், சில வீராங்கனைகள் தன்பாலின ஈர்ப்பாளராக இருந்து, தங்களுக்கு விருப்பமான நபரை திருமணம் செய்து கொண்ட செய்திகளும் வெளி வந்துள்ளது.
ஆனால், அதே வேளையில், ஆண்கள் கிரிக்கெட் துறையில், வீரர்கள் தன்பாலின ஈர்ப்பாளர் என்பது பற்றி தெரிவித்தது, மிகவும் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவன் டேவிஸ் என்பவர், தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை ஒத்துக் கொண்டு, இது பற்றிய தகவலையும் தெரிவித்திருந்தார். அது மட்டுமில்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் தன்பாலின ஈர்ப்பாளரான முதல் வீரராக ஸ்டீவன் டேவிட் இருந்தார்.
இந்நிலையில், தற்போது நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஒருவரும், தான் ஒரு தன்பாலின ஈரப்பாளர் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் டேவிஸ், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 1997 வரை, நியூசிலாந்து அணிக்காக கிரிக்கெட் போட்டிகள் ஆடி உள்ளார். ஐந்து டெஸ்ட் போட்டி மற்றும் 11 ஒரு நாள் போட்டிகள் ஆடி உள்ள ஹீத் டேவிஸ், பந்து வீச்சில் சிறப்பாக செயல்படாததன் காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகளும் அவருக்கு பெரிய அளவில் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது பேசியுள்ள ஹீத் டேவிஸ், "என் வாழ்க்கையின் இந்த பகுதியை நான் மறைத்து வைத்திருப்பதாகவே உணர்ந்தேன். இதனால், நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளார் என்பதை மற்றவர்களிடமும் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதனை பெரிய அளவில் மறைத்து வைத்திருந்ததால், நிறைய கஷ்டங்களையும் நான் அனுபவித்து வந்தேன். ஆக்லாந்தில் உள்ள அனைவருக்கும், நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பது தெரியும். ஆனால், அந்த விஷயம் மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. இதனால் நான் சுதந்திரமான ஒருவனாக உணர்ந்தேன்" என ஹீத் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்