மத்த 'சீனியர்' பிளேயர்ஸ விடுங்க.. ஆனா, இந்த 'பையன்' கண்டிப்பா ஆடியே ஆகணும்.. அவரு இந்தியன் 'டீம்'க்கு ரொம்ப 'முக்கியம்'.. கோரிக்கை வைக்கும் 'முன்னாள்' வீரர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

மத்த 'சீனியர்' பிளேயர்ஸ விடுங்க.. ஆனா, இந்த 'பையன்' கண்டிப்பா ஆடியே ஆகணும்.. அவரு இந்தியன் 'டீம்'க்கு ரொம்ப 'முக்கியம்'.. கோரிக்கை வைக்கும் 'முன்னாள்' வீரர்கள்!!

இதற்காக, இந்திய அணி நேற்று இங்கிலாந்து சென்றடைந்தது. அடுத்த சில தினங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதன் பிறகே பயிற்சியை தொடங்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இந்த இரண்டு தொடருக்கும் சேர்த்து 20 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்த 20 வீரர்களில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில், யார் எல்லாம் தேர்வாவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சிற்கு அதிக சாதகமாக இருக்கும் என்பதால், எந்த வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி களமிறக்கப் போகிறது என்பதில், இந்திய அணியின் வெற்றியும் அடங்கியுள்ளது.

பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோர்  உள்ளதால், யார் எல்லாம் களமிறங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர், முக்கியமான ஒரு வீரரை நிச்சயம் களமிறக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பேசிய ரீதிந்தர் சிங் சோதி (Reetinder Singh Sodhi), 'பந்து வீச்சை வைத்துப் பார்த்தால், மிக முக்கியமான இந்த போட்டியில், முகமது சிராஜ் நிச்சயம் களமிறங்க வேண்டும். தனது பந்து வீச்சின் மூலம், தான் கண்ட முன்னேற்றத்தின் காரணமாக, சிராஜ் பெயர் கிரிக்கெட் உலகில் அதிகம் வெளிப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டியைப் பொறுத்தவரை, சிராஜ் ஒரு குழந்தை தான். ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பதித்த முத்திரை, அவரிடம் வெளிப்பட்ட போட்டி மனப்பான்மை மற்றும் அவரது பந்து வீச்சின் வேகம், இஷாந்த் ஷர்மாவை விட அவரது பெயர் முன்னிலையில் இருக்க உதவி செய்துள்ளது' என சோதி தெரிவித்துள்ளார்.

அதே போல, ,மற்றொரு முன்னாள் இந்திய வீரரான சபா கரீமும், சிராஜ் இந்திய அணியில் இடம்பெற வேண்டியதன் அவசியத்தை தெரிவித்துள்ளார். 'நியூசிலாந்து அணியில், டாம் லதாம், கான்வே, ஹென்ரி நிகோலஸ் மற்றும் மிட்செல் சான்டனர் என நான்கு இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இந்திய அணியின் நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், முகமது சிராஜ் இடதுகை வீரர்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசக் கூடியவர். இதனால் தான், சிராஜ் விளையாடுவது சிறந்ததாக இருக்கும் என ரவி சாஸ்திரி மற்றும் கோலி ஆகியோர் நினைக்கிறார்கள்' என சபா கரீம் (Saba Karim) தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், இந்திய அணி இங்கிலாந்து கிளம்புவதற்கு முன்னர், கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஆன்லைன் மூலம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது லைவ் ஆரம்பிப்பதற்கு முன்னர், இடதுகை பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த சிராஜ் மற்றும் ஷமி ஆகியோரை களமிறக்க வேண்டும் என கோலி தெரிவித்திருந்தார். இந்த ஆடியோ லீக்காகி அதிகம் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்