'அவர் பாதுகாப்பற்ற, பலவீனமான மனநிலை கொண்டவர்'.. கிரிக்கெட் பிரபலம் பற்றி பயிற்சியாளர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கவுதம் கம்பீர் பாதுகாப்பற்ற, பலவீனமான மனநிலையைக் கொண்டவர் என இந்திய அணியின் முன்னாள் மனநல பயிற்சியாளர் பேடி அப்டன் கூறியுள்ளார்.

'அவர் பாதுகாப்பற்ற, பலவீனமான மனநிலை கொண்டவர்'.. கிரிக்கெட் பிரபலம் பற்றி பயிற்சியாளர்!

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தொடக்க வீரராக இருந்தவர் கவுதம் கம்பீர். இவர் அண்மையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விடைபெற்றார்.

கவுதம் கம்பீர் தனது கிரிக்கெட் இன்னிங்சை முடித்துவிட்டு தற்போது அரசியல் இன்னிங்சை தொடங்கிவுள்ளார். கடந்த மாதம் பாஜக-வில் இணைந்த கம்பீர் மக்களவைத் தேர்தலில் தெற்கு டெல்லி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மனநல பயிற்சியாளர் பேடி அப்டன் தனது புத்தகத்தில் கவுதம் கம்பீர் பாதுகாப்பற்ற, பலவீனமான மனநிலையைக் கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார்.

அதில், “கம்பீர் ஒரு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர். 2009 ஆம் ஆண்டில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அப்போது அவர் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் 200 ரன்கள் அடிக்க முடியவில்லையே என அதிருப்தி அடைவார். எனினும் அவர் சிறந்த பேட்ஸ்மேன்” என பேடி அப்டன் கூறியுள்ளார்.

மேலும், அந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் கோலியை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதில், தோனியை ஒரு சிறந்த மனிதராகவும், ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவரை மிகவும் மதிக்கிறேன் என்றும் அவருடைய பணிவு மற்றும் பொறுமை  தன்மை அவர் பிறப்பிலேயே இருக்கிறது என்றும் இந்த இரண்டும்தான் அவருடைய வெற்றிக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கோலியை பற்றி கூறியுள்ள பேடி அப்டன் அவருடைய இமோஷன்ஸ் தான் அவரின் வெற்றிக்கு காரணம் என்றும் தோனிக்கு அவருடைய பொறுமைதான்  அவரின் வெற்றிக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார். பேடி அப்டன் தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினுடைய மனநல பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

MSDHONI, VIRATKOHLI, GAUTAMGAMBHIR, UPTON, FORMER INDIAN COACH