Delhi Capitals-க்கு பயிற்சியாளர் ஆன இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய இணை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்கு அடுத்து நாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.
ஐபிஎல் தொடர் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு துணை பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ரத்ரா இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு, இளம் வயதிலேயே (20 வயது) டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் உள்ள நிலையில், இணைய பயிற்சியாளாராக அஜய் ரத்ரா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🚨 ANNOUNCEMENT 🚨
Join us in welcoming former 🇮🇳 wicket-keeper batsman @ajratra to the DC family as Assistant Coach 🙌🏼
Read more on this addition to our coaching staff 👉🏽 https://t.co/DxJ25CCdEi#YehHaiNayiDilli pic.twitter.com/comqzVtCMA
— Delhi Capitals (@DelhiCapitals) March 28, 2021
அதேபோல் டெல்லி அணிக்கு புதிய கேப்டன் யார் என்ற ஆலோசனையும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியை கேப்டனாக இருந்து வழி நடத்தி வருகிறார். இவர் தலைமையிலான டெல்லி அணி, கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என டெல்லி அணி நிர்வாகம் தீவிர ஆலோசானை மேற்கொண்டு வருகிறது.
மற்ற செய்திகள்