'விராட் கோலி ஒரு மாடர்ன் டே ஜீசஸ்'... 'புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து முன்னாள் வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒரு மாடர்ன் டே ஜீசஸ் என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

'விராட் கோலி ஒரு மாடர்ன் டே ஜீசஸ்'... 'புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து முன்னாள் வீரர்'!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிமி பீட்டர் ஸ்வான் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நல்லதொரு உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியின்போது, பேட்டில், பந்து பட்டுவிட்டதாக நினைத்து உடனடியாக களத்தில் இருந்து விராட் கோலி பெவிலியன் திரும்பியது தன்னை மிகவும் கவர்ந்தது’ என்று கூறியுள்ளார்.

‘பேட்டின் நுனியில், பந்து பட்டு அவுட் என தெரிந்தும்கூட, மற்ற வீரர்கள் பெவிலியன் திரும்ப மாட்டார்கள். பேட்டின் நுனியில் பந்து பட்டதும் பேட்ஸ்மேன் மைதானத்திலிருந்து வெளியேறவில்லை என்றால், அது ஏமாற்று வேலை. ஆனால் விராட் கோலி, மற்ற வீரர்களிலிருந்து வேறுபடுகிறார்.  உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக 77 ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவர் அவுட் என நினைத்து வெளியேறினார்.

அம்பயர் கூட எதுவும் சொல்லவில்லை. ஆனால் உறுதியாக பேட்டில், பந்து பட்டது என நினைத்து வெளியேறியது, சாதரணமான பேட்ஸ்மேன்கள் செய்யக்கூடிய காரியம் இல்லை. அவரது இந்த செயல் மிகவும் உயர்தரமான, நேர்மையானது. அவர் ஒரு நவீன ஜீசஸ்’ என்று கிமி பீட்டர் பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார்.