SAT20 : "அல்ஷாரி ஜோசப், ஷெப்பர்டு பந்து வீச்சால் வெற்றி சாத்தியமானது" - JSK VS PC மேட்ச் பத்தி அனிருத்தா ஸ்ரீகாந்த்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

SAT 20 கிரிக்கெட் தொடரில் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிகள் மோதின.

SAT20 : "அல்ஷாரி ஜோசப், ஷெப்பர்டு பந்து வீச்சால் வெற்றி சாத்தியமானது" - JSK VS PC மேட்ச் பத்தி அனிருத்தா ஸ்ரீகாந்த்.!

முதலில் பேட் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. தொடக்க ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மிகவும் மந்தமாக விளையாடி 50 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்தார். எனினும் லியுஸ் டூப்ளாய் 40 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் விளாசியதால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் சராசரிக்கும் அதிகமான இலக்கை எடுக்க முடிந்தது.

169 ரன்கள் இலக்கை விரட்டிய பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியானது 20 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பில் சால்ட்  (29), ரீலி ரோஸோவ் (0) ஆகியோரை தொடக்கத்திலேயே அல்ஷாரி ஜோசப் ஆட்டமிழக்கச் செய்தார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட ஆரோன் பாங்கிசோ, அதிரடியாக விளையாடிய பில் சால்ட் (29), ஜேம்ஸ் நீஷம் (24), தியுனிஸ் டி பிரைன் (18), ஷேன் டேட்ஸ்வெல் (22) ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பினார். கடைசி ஓவரில் பிரிட்டோரியஸ் அணிக்கு 10 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ரோமேரியோ ஷெப்பர்டு 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. 4 ஆடங்களில் விளையாடி உள்ள சூப்பர் கிங்ஸ் 8 புள்ளிகளுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

Former CSK Cricketer Anirudha srikkanth on JSK vs PK Match SAT20

போட்டி முடிவடைந்ததும் வயகாம் 18 விளையாட்டு நிபுணர் அனிருத்தா ஸ்ரீகாந்த் இதுபற்றி பேசுகையில், “ டி 20 கிரிக்கெட்டில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மோசமான ஆட்டத்தை விளையாடி உள்ளார். அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த ரன்களை எடுப்பது டி 20 கிரிக்கெட்டில் பெரிய குற்றம். அவர், பந்துகளை வீணடித்ததால்தான் அழுத்தம் ஏற்பட்டு டு பிளெஸ்ஸிஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு முனையில் உள்ள பேட்ஸ்மேன் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்யாவிட்டாலும், தீவிர முனைப்பு இல்லாமல் விளையாடினாலும் இதுதான் நடக்கும். டூப்ளாய் அதிரடியாக விளையாடிதால் மட்டுமே ஜோபர்க் கிங்ஸ் அணியால் சராசரிக்கும் அதிகமான ரன்களை எடுக்க முடிந்தது"

"இலக்கை நோக்கி பேட் செய்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்து ஆட்டத்தை தவறவிட்டுள்ளது. எனினும் கடைசி ஓவரில் 10 ரன்களே தேவையாக இருந்த நிலையில் ரோமரியோ ஷெப்பர்டு அற்புதமாக வீசி  3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். டி 20 கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் 10 ரன்களை விட்டுக்கொடுக்காமல் இருப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இதை ஷெப்பர்டு செய்துள்ளார். அவரது செயல் திறன் பாராட்டுக்குரியது"

Former CSK Cricketer Anirudha srikkanth on JSK vs PK Match SAT20

தான் வீசும் வேகத்தில் நல்ல வேரியேஷன்களை ஷெப்பர்டு காட்டினார். முக்கியமான கட்டத்தில் ஆதில் ரஷித் கொடுத்த கேட்ச்சை டு பிளெஸ்ஸிஸ் அற்புதமாக பிடித்தார். இது மாதிரியான நேரத்தில்தான் சிறந்த பீல்டர்கள் இருப்பது பலம் கொடுக்கும். மேலும் அல்ஷாரி ஜோசப் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசி முக்கியமான இரு விக்கெட்களை சாய்த்தார். வில் ஜேக்ஸ், ரீலி ரோஸோவ் ஆகியோரது விக்கெட்களை அவர் வீழ்த்தினார். மேலும் 19வது ஓவரையும் அற்புதமாக வீசினார். இதனால்தான் ஆட்டம் கடைசி ஓவருக்கு சென்றது"

"ஆரோன் பாங்கிசோவும் பந்து வீச்சில் அமர்க்களப்படுத்தினார். சொந்த மைதான சாதகங்களை சிறப்பாக பயன்படுத்தி 4 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார் அவர். ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களைபறக்க விட்ட ஜேம்ஸ் நீஷமை, பாங்கிசோ காலி செய்தார். இந்த ஆட்டத்தில் எப்படி தோல்வி அடைந்தோம் என பிரிட்டோரியஸ் கேபிடல்ஸ் அணி சிந்திக்கக்கூடும். அந்த அணி வீரர்களில் ஒருவர் கூட 30 ரன்களை தொடவில்லை. இதுவே அவர்களுக்கு பலவீனமாக அமைந்தது. பிரிட்டோரியஸ் அணி விளையாடிய விதத்துக்கு ஒரு ஓவரை மீதம் வைத்து வென்றிருக்க வேண்டும். 19வது ஓவரில் பிரிட்டோரிஸ் ரன் அவுட் ஆனார். அந்த நேரத்தில் அது தேவை இல்லாதது. மதி மயங்கியதுபோன்று அவர், நடந்து கொண்டார்” என்றார்.

SAT20, ANIRUDHA SRIKKANTH

மற்ற செய்திகள்