’இப்படி பிரியாணிய வெளுத்துக்கட்டினா, உலகக் கோப்பைய எப்டி வெல்றது?’.. விளாசிய முன்னாள் கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில், அனைத்து நாட்டு அணியினரும் அதற்கான பயிற்சி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்களை அந்நாட்டு முன்னாள் வீரரும் கேப்டனுமான வாசிம் அக்ரம் சரமாரியாகக் கேட்டுள்ளது வைரலாகி வருகிறது.

’இப்படி பிரியாணிய வெளுத்துக்கட்டினா, உலகக் கோப்பைய எப்டி வெல்றது?’.. விளாசிய முன்னாள் கேப்டன்!

மே 30-ஆம் தேதி அன்று இங்கிலாந்தில் உலகக் கோப்பை போட்டி தொடங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பைப் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் வரும் 18-ம் தேதியும், இந்திய அணி வரும் 15-ம் தேதியும் அறிவிக்கவுள்ளன. இதனையடுத்து பாகிஸ்தான் அணியினர் குறித்து அந்நாட்டு அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பேசும்போது, ஆஸ்திரேலியாவும் எதிராக பாகிஸ்தான் விளையாண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் இழந்ததற்கு முக்கியக் காரணமே, பாகிஸ்தான் அணிவீரர்களின் உடல்தகுதி சர்வதேச தரத்துக்கேற்ப இல்லை என்பதுதான் என்று அதிரவைக்கும்படியாகக் கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே மோசமான சூழலை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணி கடந்த 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த 50 ஓவர்கள் போட்டியின், சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. தவிர நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசிய கோப்பை உள்ளிட்ட போட்டிகளிலும் சரி, துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாண்ட ஒருநாள் தொடரிலும் சரி  பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இருந்தும் அந்த அணி படுதோல்வியை சந்தித்தது.

இத்தனைக்கும் பாகிஸ்தான் அணியில் இருந்து 6 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இளம் வீரர்கள் சரியான உடற்தகுதி இல்லாததால் அணியிடம் இருந்து சிறப்பான விளையாட்டை எதிர்பார்க்க முடியவில்லை. இந்த நிலையில், இதுபற்றி ஒரு பேட்டியில் கூறிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், தம் நாட்டு வீரர்களுக்கு ருசியான பிரியாணி அளிக்கப்படுவதாகவும், இப்படி சாப்பிட்டால், சாம்பியன்களுடன் போட்டி போட்டும் வெற்றி பெற முடியாது, சாம்பியன்களுக்கு பிரியாணி சப்ளை செய்தும் வெல்லலாம் என நினைக்கக் கூடாது என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, PAKISTAN, TEAM, WASIMAKRAM