K L ராகுலின் கேப்டன் பதவி செயல்பாட்டை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கேப்டன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் கேப்டன்ஷிப்பை சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

K L ராகுலின் கேப்டன் பதவி செயல்பாட்டை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதற்கு முன் இரண்டாவது டெஸ்டில் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் இந்தியா மண்ணைக் கவ்வியது. முதல் டெஸ்டுக்கு பிறகு நடந்த எந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற முடியவில்லை.

ஒருநாள் போட்டிகளில் கே.எல்.ராகுலின் ஒருநாள் கேப்டன்சி குறித்து பேசிய கவாஸ்கர், "பார்ட்னர்ஷிப் இருக்கும் போதெல்லாம் கே.எல்.ராகுலுக்கு எந்தவொரு யோசனைகளும் இல்லை என்றும், செய்வதறியாமல் திகைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், பார்ட்னர்ஷிப் இருக்கும்போது, ​​சில சமயங்களில் கேப்டன் தடுமாறுவார்கள். அதுதான் ராகுலுக்கும் நடந்தது என்று நினைக்கிறேன். பேட்டிங் செய்வதற்கு தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் மிகவும் நன்றாக இருந்தது. பந்து மிகவும் அழகாக பேட்டில் வந்து கொண்டிருந்தது, இருப்பினும் இந்தியாவின் ஆட்டம் போதுமானதாக இல்லை என்றும், சில சமயங்களின் போது, ​​ராகுலுக்கு யோசனைகள் இல்லாமல் போனது போல் இருந்தது.

Former cricketer Sunil Gavaskar slams KL Rahul Captaincy

கேஎல் ராகுலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் இந்தியாவின் இரண்டு அனுபவமிக்க டெத்-ஓவர் பந்துவீச்சாளர்கள், ஆனால் அவர்களுக்கு கடைசி 5-6 ஓவர்கள் மிச்சம் வைத்திருக்க வேண்டும். முன் கூட்டியே அவர்களை பயன்படுத்தி இருக்க கூடாது என விமர்சித்துள்ளார். மேலும், இது ராகுல் கேப்டனாக ஆரம்ப நாட்கள், ஒருவேளை விஷயங்கள் மாறும், “ராகுலுக்கு கேப்டன் பதவியில் அதிக அனுபவம் இல்லை. கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ரஞ்சி டிராபி அல்லது லிஸ்ட் ஏ எந்த ஃபார்மேட் போட்டியிலும் கேப்டனாக இருந்ததில்லை. ஐபிஎல்-ல் அவரது கேப்டன்சியைப் பார்த்தால் கூட, கடந்த இரண்டு ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் குறிப்பிடத்தக்க எதையும் செய்யவில்லை” என்று கவாஸ்கர் ராகுலை விமர்சித்துள்ளார்.

VIDEO: தேசியகீதம் போடுறப்போ இப்படி தான் பண்ணுவீங்களா? கடுப்பான ரசிகர்கள்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கோலி

Former cricketer Sunil Gavaskar slams KL Rahul Captaincy

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இதையடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி இறுதி கட்டத்தில் 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இந்தியாவை ஒய்ட் வாஷ் செய்து கைப்பற்றியது.

Netflix-ஐ புறக்கணித்த இந்தியர்கள்.. அகல பாதாளத்திற்கு செல்லும் பங்கின் விலை.. வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

Former cricketer Sunil Gavaskar slams KL Rahul Captaincy

FORMER CRICKETER SUNIL GAVASKAR, KL RAHUL CAPTAINCY, சுனில் கவாஸ்கர், KL ராகுல்

மற்ற செய்திகள்