"எழுதி வச்சுக்கோங்க.. CSK க்கு அடுத்த கேப்டன் அவரு தான்".. ஆருடம் சொன்ன வீரேந்திர சேவாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  குறித்து பேசியிருக்கிறார்.

"எழுதி வச்சுக்கோங்க.. CSK க்கு அடுத்த கேப்டன் அவரு தான்".. ஆருடம் சொன்ன வீரேந்திர சேவாக்..!

Images are subject to © copyright to their respective owners.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்த்து களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ருத்துராஜ் கெய்க்வாட் பற்றி பேசியிருக்கிறார். அப்போது,"ருத்துராஜ் அரை சதம் அடிப்பது மட்டுமல்ல, அவர் அதை சதங்களாக மாற்றுகிறார். அதுவே அவருடைய சிறப்பு. இரண்டு சீசன்களுக்கு முன்பு சிஎஸ்கேக்காக ரன் குவித்தபோது, ​​சதம் அடித்திருந்தார். ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, என்னவென்றால் அவருக்கு இந்தியாவுக்காக விளையாட அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏனென்றால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் நன்றாக விளையாடும்போது, ​​​​அவர் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த சீசன் நன்றாக இருந்தால், இந்திய அணிக்கு திரும்புவதற்கு அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. சிஎஸ்கே கேப்டன் பதவிக்கு எம்எஸ் தோனியின் சிறந்த வாரிசாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பதாக நான் நினைக்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட். அடுத்த ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரையில் 9 டி20 போட்டிகளிலும், 1 ஒருநாள் போட்டியிலும் கெய்க்வாட் விளையாடி இருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் இதுவரையில் 37 போட்டிகளில் அவர் விளையாடி 1299 ரன்களை குவித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரராக விளையாடும் ருத்துராஜ் குஜராத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அபாரமாக ஆடி 92 ரன்களை குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

RUTURAJ GAIKWAD, SEHWAG, CSK, IPL

மற்ற செய்திகள்