"பவுலரோட 2 விரலை தோனி உடைச்சுட்டாரு".. ராபின் உத்தப்பா உடைத்த சீக்ரட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, தோனி குறித்து பேசியிருக்கிறார்.

"பவுலரோட 2 விரலை தோனி உடைச்சுட்டாரு".. ராபின் உத்தப்பா உடைத்த சீக்ரட்..!

                     Images are subject to © copyright to their respective owners.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பையை இந்தியாவிற்கு வாங்கிக்கொடுத்த பெருமை தோனிக்கு உண்டு. மேட்ச் பரபரப்பான சூழ்நிலையில் இருக்கும்போதும், பொறுமையுடன் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதில் தோனி ஒரு வித்தைக்காரர். இதன் காரணமாகவே ரசிகர்கள் தோனியை கூல் கேப்டன் என்றும் மிஸ்டர் கூல் என்றும் அழைக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனான தோனியை ரசிகர்கள் 'தல' என்றும் சுரேஷ் ரெய்னாவை 'சின்ன தல' என்றும் குறிப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ராபின் உத்தப்பா தோனி குறித்து பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியபோது,"2003 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள என்சிஏவில் நடந்த இந்தியா A அணிக்கான கேம்ப் ஒன்றில் தான் முதன் முதலில் தோனியை பார்த்தேன். தலைநிறைய முடியுடன் இருந்த தோனி முனாஃப் படேல் உள்ளிட்ட பவுலர்களை சிக்ஸர்களால் திணறடித்துக்கொண்டிருந்தார். அப்போது இடது கை ஸ்பின்னரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் பந்து வீச வந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

தோனி பந்தை பவுலருக்கு நேராக கடினமாக அடித்தார். அதனை ஸ்ரீராம் கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், ஸ்ரீராம் பந்தை தவறவிட்டார். பின்னர் அங்கிருந்து டிரெஸ்ஸிங் ரூமிற்கு ஓடினார். ஆரம்பத்தில் பந்தை பிடிக்க ஓடுகிறார் என்றுதான் நினைத்தோம். ஆனால், ஸ்ரீராமின் இரண்டு விரல்கள் உடைந்திருந்தன. அப்போது தான் தோனி எவ்வளவு கடினமாக அடிப்பார் என்பது புரிந்தது. அவர் இந்தியாவுக்காக விளையாடுவார் என எங்களுக்கு உறுதியாக தெரிந்ததும் அப்போதுதான்" எனக் கூறியிருக்கிறார்

MS DHONI, ROBIN UTHAPPA, CSK

மற்ற செய்திகள்