"விராட் கோலி ஒரு சாம்பியன்.. அவரை பத்தி கவலையே வேண்டாம்".. ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழாரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.

"விராட் கோலி ஒரு சாம்பியன்.. அவரை பத்தி கவலையே வேண்டாம்".. ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழாரம்..!

                       Images are subject to © copyright to their respective owners.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதனால் 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. இருப்பினும், கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

Former Cricketer Ricky Ponting about Virat Kohli Batting ability

Images are subject to © copyright to their respective owners.

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் விராட் கோலி. சமீப ஆண்டுகளில் சதம் எடுக்காமல் இருந்ததால் ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் துவங்கி வரிசையாக உலகக்கோப்பை டி20 தொடர் போட்டிகளில் அதிரடி காட்டினார் கோலி. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த சூழ்நிலையில் நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியிலும் விராட் கோலி மிகவும் குறைவான ரன்களையே எடுத்திருக்கிறார். 3 போட்டிகளிலும் விளையாடியுள்ள கோலி மொத்தமாக 111 ரன்களை எடுத்திருக்கிறார். இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்களான மேத்திவ் ஹைடன், மார்க் வாஹ் ஆகியோர் விமர்சனம் செய்திருந்தனர்.

Former Cricketer Ricky Ponting about Virat Kohli Batting ability

Images are subject to © copyright to their respective owners.

ரிக்கி பாண்டிங்

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தனக்கு விராட் கோலி மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர்,"இந்தத் தொடரில் யாருடைய ஃபார்மையும் நான் பார்க்கவில்லை, ஏனெனில் பேட்ஸ்மேன்களுக்கு இது ஒரு கெட்ட கனவு தான். கோலியைப் பொறுத்தவரை, சாம்பியன் வீரர்கள் எப்போதும் தங்களுக்கான ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். இந்த நேரத்தில் அவர் சிறிது தடுமாற்றத்துடன் இருக்கலாம். அவர் அடிப்பார் என்று நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ரன்களை அவர் அடிக்காமல் இருக்கலாம் ஆனால் அவர் எதார்த்தத்தை புரிந்துகொள்ள கூடியவர். நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக இருக்கும்போது, ​​நீங்கள் போராடியும் ரன்களை எடுக்காமல் இருக்கும்போது, ​​அதை நீங்களே நன்கு அறிவீர்கள். நான் இதைப் பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் கோலியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

VIRAT KOHLI, RICKY PONTING, CRICKET

மற்ற செய்திகள்