'இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்’... 'இவர் தலைமையிலான குழு தேர்வு?'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை, கபில் தேவ் தலைமையிலான இடைக்காலக் குழு (அட்ஹாக் கமிட்டி) தேர்வு செய்யும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

'இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்’... 'இவர் தலைமையிலான குழு தேர்வு?'...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிக்கு, தகுதியான விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். ரவிசாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவாரா என்பதற்கு நேர்காணலுக்கு பிறகே தெரியவரும்.

இந்நிலையில், வழக்கமாக சச்சின், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தான் பயிற்சியாளரை தேர்ந்தெடுத்து கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்யும். ஆனால்  தற்போது அவர்கள்  மீது இரட்டை ஆதாய பிரச்சினை கிளம்பியதால், இந்த முறை அவர்கள் பயிற்சியாளர் தேர்வு பணியை செய்யமாட்டார்கள் என்று தெரிகிறது.

எனவே பெண்கள் அணிக்கான பயிற்சியாளரை தேர்வு செய்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில், இடைக்கால கமிட்டியே ஆண்கள் அணிக்கான பயிற்சியாளரையும் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கமிட்டியில் அன்ஷூமன் கெய்க்வாட், ஷாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். என்றாலும் இந்த பணியை, எந்த கமிட்டி மேற்கொள்ளும் என்பது உச்சநீதிமன்றம் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்.

INDIATEAM, RAVISHASTRI, KAPILDEV