"அவரோட 'commentary' ரொம்ப 'ஃபேமஸ்',,.. 'இப்டி' நடக்கும்னு 'கனவு'ல கூட நினைக்கல,.." - கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய 'துயரம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர் (commentator) குழுவில் இருந்த ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவானான டீன் ஜோன்ஸ் (Dean Jones) மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 59.

former australian bastman dean jones dies at 59 in mumbai

"அவரோட 'commentary' ரொம்ப 'ஃபேமஸ்',,.. 'இப்டி' நடக்கும்னு 'கனவு'ல கூட நினைக்கல,.." - கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய 'துயரம்'!!!

முன்னதாக, மும்பையில் தங்கியிருந்த டீன் ஜோன்ஸ்க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான டீன் ஜோன்ஸ், 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,631 ரன்கள் எடுத்துள்ளார். அதே போல, 164 ஒரு நாள் போட்டிகள் ஆடியுள்ள அவர், 6,068 ரன்கள் குவித்துள்ளார். சில காலம் பயிற்சியாளராகவும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

former australian bastman dean jones dies at 59 in mumbai

இந்திய கிரிக்கெட் உலகில் தனது வர்ணனை மூலம் மிகவும் பிரபலமான டீன் ஜோன்ஸ், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளின் போது ஒவ்வொரு அணிகள் குறித்தும், சில வீரர்கள் குறித்தும் தனது கருத்தை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. திடீரென ஏற்பட்ட இவரது மறைவால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

 

 

மற்ற செய்திகள்