பாத்துகோங்க...! அவ்ளோ தான் சொல்ல முடியும்...' 'அவங்க பாதுகாப்புக்கு நீங்க தான் பொறுப்பு...' - நியுசிலாந்து பிரதமர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமீண்டும் கொரோனா பரவ வாய்ப்பிருக்கும் நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் வெளிநாட்டு வீரர்களின் நடைமுறையை மாற்றியுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
ஐபிஎல் 2021ன் 14வது சீசன் இன்று சென்னையில் தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கொரோனா பரவும் அச்சம் அனைத்து தரப்பினரையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்ற வருடமே கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரை யூ.ஏ.இ-யில் நடத்தி முடித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வருடம் இந்தியாவின் சென்னை, மும்பை உள்ளிட்ட 6 இடங்களில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
தற்போது மும்பையில் கொரேனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில், இடத்தை மாற்றும் முடிவு எடுக்கப்படாது என்றும் பாதுகாப்பான வகையில் போட்டிகள் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆனால் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் இந்திய பயணிகள் நியூசிலாந்துக்கு வரவும், நியூசிலாந்து குடிமக்களாகவே இருந்தாலும் இந்தியாவிலிருந்து வர தடை விதித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா.
மேலும், இந்தியாவின் ஐபில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்ற 8 நியூசிலாந்து வீரர்களின் பாதுகாப்புக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமே பொறுப்பு என்றும் ஜெசிண்டா கூறியுள்ளார்.
கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர், கைல் ஜாமீசன், ஜிம்மி நீசம், டிம் செய்பர்ட், ஆடம் மில்னே மற்றும் லாக்கி பெர்குசன் ஆகிய 8 நியூசிலாந்து வீரர்கள் இந்திய ஐபிஎல் 2021 தொடரில் இடம்பெற்றுள்ளனர். தற்போது இவர்களே நினைத்தாலும் இந்தியாவில் இருந்து நியுசிலாந்துக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்